ஒருவன் மண்பானையிடம் கேட்டான்.
"இந்தக் கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும்
எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்றிருக்கிறாய்?"
மண் பானை சொன்னது,
" என்னுடைய ஆரம்பமும் மண்தான்.
இறுதியும் மண்தான்.
எவனொருவன் தனது
தொடக்கத்தையும் முடிவையும்
உணர்ந்திருக்கிறானோ அவன் ஏன் சூடாகப் போகிறான்?
என்னைப் போலத்தான் இருப்பான்."
மண்பானை எப்படி தண்ணீரை குளிர்ச்சியாக மாற்றுகின்றது என்று தெளிவுபடுத்தாமல் இது போன்ற பயனற்ற எழுத்துகளைப்போல் பல எழுத்தாளர்கள் கதைளை எழுதி நம் மக்களை முட்டாள்களாகிவிட்டாகள் இவர்களை எப்படி மீட்டு எடுப்பது?