Behind the Writing
சிறுவயதிலிருந்து எனக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் உண்டு, அதன் காரணமாக 17 வயதில் ரேடியோவுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கி வந்து assembling செய்து ON செய்தவுடன் அதிலிருந்து வந்த முதல் குரல் தான் அறிவியல் தேடலுக்கு எனக்கு கிடைத்த முதல் வெற்றி.
பிறகு எலக்ட்ரிகலை பற்றி படித்து தெரிந்து கொண்டு, பயிற்சி எடுத்துக் கொண்டு மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பதிவு பெற்ற மின் ஒப்பந்தர்ராக 1985 இல் என்னுடைய தொழிலை ஆரம்பித்தேன், ஒப்பந்ததாரர் என்ற தகுதியை நான் அடையும் பொழுது எனக்கு 19 வயது.15 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் 2000 ஆவது ஆண்டு நெய்வேலியில் NO 1 எலக்ட்ரிகல் ஒப்பந்த நிறுவனம் என்ற உச்சத்தை நான் அடைந்து விட்டதால் அதை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக நான் பார்த்தேன். அதேசமயம் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் அல்ல என்பதை உணர்ந்து இனி தொழிலிலேயே முழு கவனத்தையும் செலுத்தாமல் தொழிலில் இருந்து விடுபட்டு அறிவியலிலும், ஆன்மிகத்திலும் புதியதாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணி ஒப்பந்த தொழிலில் இருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொண்டேன்.
2000 முதல் 2010 வரை அறிவியலிலும், ஆன்மிகத்திலும் பல ஆய்வுகள் செய்தேன். எதுவும் எனக்கு புதிய அறிவை கொடுக்கவில்லை.2010இல் ஒரு நாள் என்னுடைய சிந்தனையை ஆய்வு செய்தேன். அப்போது எனக்கு ஒரு புதிய அறிவு கிடைத்தது அந்த அறிவு தான் என்னுடைய அனைத்து ஆய்விற்கும் மூலக்காரணம்.
நம்முடைய சிந்தனையும், செயலும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று முதல் ஆய்வில் கிடைத்த அறிவை அடிப்படை ஆதாரமாக வைத்து விதியை பற்றியும், கடவுளைப் பற்றியும், நீதியைப் பற்றியும் ஆய்வு செய்து “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல“ என்ற முதல் புத்தகத்தை 2011 இல் எழுதினேன்.
இரண்டாவது புத்தகமாக 2013இல்” ஏழாவது அறிவு” என்ற புத்தகத்தை எழுதினேன்.
மூன்றாவது புத்தகமாக 2013இல் “தூக்குத் தண்டனையும், கடவுளும் “என்ற புத்தகத்தை எழுதினேன்.
நான்காவது புத்தகமாக 2013இல்“மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் “என்ற புத்தகத்தை எழுதினேன்.
நான் எழுதிய நான்கு புத்தகங்களும் புதிய அறிவின் வெளிப்பாடாக இருந்ததால் படித்தவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் உணர்தேன். ஏன் படைத்தவர்களால் என்னுடைய புத்தகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஐந்தாவது புத்தகமாக 2014இல் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தை எழுதினேன்.
ஆறாவது புத்தகமாக2024இல் ”என் பார்வையில் அரசியல்”என்ற புத்தகத்தை எழுதினேன்.
ஏழாவது புத்தகமாக 2024இல் “குமார் விதிகள்” என்ற புத்தகத்தை எழுதினேன்.
இதற்கு இடையில் பல ஆய்வு கட்டுரைகளை எழுதி இருக்கின்றேன்.
2000 ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்வியலையும், ஆன்மிகத்தையும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய என்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டேன்.என்னுடைய ஆய்வுகள் மூலம் நான் பெற்ற அறிவால்,நான் என்ற உணர்வு மாயை என்பதை அறிவியல் புரிதலோடு ஞானத்தின் உச்சத்தை அடைந்தேன். நான் அடைந்த ஞானத்தின் உச்சத்தை இதுவரை இந்த உலகில் வாழ்ந்த யாரும் அடைந்திருக்க முடியாது என்பதே என்னுடைய கணிப்பு! காரணம் முன்னோர்கள் யாராவது நான் பெற்ற அறிவை பெற்று இருந்தால் இன்றைய சமுதாயத்தில் அந்த அறிவு இருந்திருக்கும்.
மருத்துவம்,பொறியியல் படிப்பை போல் படிப்பதால் ஞான நிலையை அடைய முடியாது ,ஞான நிலையை ஆன்மிகத்தால் அடைய முடியும் என்பது தவறு, ஆன்மீகத்துக்கும் ஞான நிலையை அடைவதற்கும் சம்பந்தமே இல்லை. ஞான நிலையை உணர்வின் ஆளுமையாலும், சிந்திக்கும் மூளையின் செயல் திறனாலும், அறிவாலும் மட்டுமே அடைய முடியும்.
ஒவ்வொருவருடைய உணர்வும்,மூளையின் செயல் திறனும், அறிவும் வேறுபட்டு இருக்கும். யாரோடும் யாரையும் ஒப்பிட முடியாது.ஒரு சிலரால் என்னுடைய ஆய்வு கட்டுரைகளை படித்த ஒரு சில நாட்களிலேயே ஞான நிலையை அடைய முடியும், பலருக்கு பல ஆண்டுகள் ஆனாலும் அடைய முடியாது காரணம் உணர்வு கட்டுப்படாது, மூளையின் சிந்தனை திறனும் போதாது, அவர்களின் வாழ்க்கை சூழலும் ஒத்துழைக்காது.இதற்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை.
உலக மக்கள் அனைவரும் வரும் காலத்தில் ஞானத்தின் உச்சத்தை அடைய ஒரே நுழைவு வாயில் “குமார் விதிகள்”என்ற ஆய்வு புத்தகம் மட்டுமே.
ஞானத்தின் உச்சத்தை உலக மக்கள் அனைவரும் அடைய வேண்டும்,அமைதியான உலகில் ஆனந்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகவே என்னுடைய எழுத்து பணியை தொடர்ந்து செய்து வருகின்றேன்.
சிறுவயதிலிருந்து எனக்கு அறிவியல் மீது அதிக ஆர்வம் உண்டு, அதன் காரணமாக 17 வயதில் ரேடியோவுக்கு தேவையான உதிரி பாகங்களை வாங்கி வந்து assembling செய்து ON செய்தவுடன் அதிலிருந்து வந்த முதல் குரல் தான் அறிவியல் தேடலுக்கு எனக்கு கிடைத்த முதல் வெற்றி.
பிறகு எலக்ட்ரிகலை பற்றி படித்து தெரிந்து கொண்டு, பயிற்சி எடுத்துக் கொண்டு மத்திய அரசு நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பதிவு பெற்ற மின் ஒப்பந்தர்ராக 1985 இல் என்னுடைய தொழிலை ஆரம்பித்தேன், ஒப்பந்ததாரர் என்ற தகுதியை நான் அடையும் பொழுது எனக்கு 19 வயது.15 ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் 2000 ஆவது ஆண்டு நெய்வேலியில் NO 1 எலக்ட்ரிகல் ஒப்பந்த நிறுவனம் என்ற உச்சத்தை நான் அடைந்து விட்டதால் அதை வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியாக நான் பார்த்தேன். அதேசமயம் பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையின் நோக்கம் அல்ல என்பதை உணர்ந்து இனி தொழிலிலேயே முழு கவனத்தையும் செலுத்தாமல் தொழிலில் இருந்து விடுபட்டு அறிவியலிலும் ,ஆன்மிகத்திலும் புதியதாக ஏதாவது ஒன்றை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணி ஒப்பந்த தொழிலில் இருந்து முழுமையாக என்னை விடுவித்துக் கொண்டேன்.
2000 முதல் 2010 வரை அறிவியலிலும், ஆன்மிகத்திலும் பல ஆய்வுகள் செய்தேன். எதுவும் எனக்கு புதிய அறிவை கொடுக்கவில்லை. 2010இல் ஒரு நாள் என்னுடைய சிந்தனையை ஆய்வு செய்தேன். அப்போது எனக்கு ஒரு புதிய அறிவு கிடைத்தது அந்த அறிவு தான் என்னுடைய அனைத்து ஆய்விற்கும் மூலக்காரணம்.
நம்முடைய சிந்தனையும், செயலும் நம் கட்டுப்பாட்டில் இல்லை என்று முதல் ஆய்வில் கிடைத்த அறிவை அடிப்படை ஆதாரமாக வைத்து விதியை பற்றியும், கடவுளைப் பற்றியும், நீதியைப் பற்றியும் ஆய்வு செய்து “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல“ என்ற முதல் புத்தகத்தை 2011 இல் எழுதினேன்.
இரண்டாவது புத்தகமாக 2013இல் ”ஏழாவது அறிவு” என்ற புத்தகத்தை எழுதினேன்.
மூன்றாவது புத்தகமாக 2013இல் “தூக்குத் தண்டனையும், கடவுளும்“ என்ற புத்தகத்தை எழுதினேன்.
நான்காவது புத்தகமாக 2013இல் “மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம்“ என்ற புத்தகத்தை எழுதினேன்.
நான் எழுதிய நான்கு புத்தகங்களும் புதிய அறிவின் வெளிப்பாடாக இருந்ததால் படித்தவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் உணர்தேன். ஏன் படித்தவர்களால் என்னுடைய புத்தகத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்று அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து ஐந்தாவது புத்தகமாக 2014இல் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது” என்ற புத்தகத்தை எழுதினேன்.
ஆறாவது புத்தகமாக 2024 இல் ”என் பார்வையில் அரசியல்” என்ற புத்தகத்தை எழுதினேன்.
ஏழாவது புத்தகமாக 2024 இல் “குமார் விதிகள்” என்ற புத்தகத்தை எழுதினேன்.
இதற்கு இடையில் பல ஆய்வு கட்டுரைகளை எழுதி இருக்கின்றேன்.
2000 ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக வாழ்வியலையும், ஆன்மிகத்தையும் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய என்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டேன். என்னுடைய ஆய்வுகள் மூலம் நான் பெற்ற அறிவால்,நான் என்ற உணர்வு மாயை என்பதை அறிவியல் புரிதலோடு ஞானத்தின் உச்சத்தை அடைந்தேன். நான் அடைந்த ஞானத்தின் உச்சத்தை இதுவரை இந்த உலகில் வாழ்ந்த யாரும் அடைந்திருக்க முடியாது என்பதே என்னுடைய கணிப்பு! காரணம் முன்னோர்கள் யாராவது நான் பெற்ற அறிவை பெற்று இருந்தால் இன்றைய சமுதாயத்தில் அந்த அறிவு இருந்திருக்கும்.
மருத்துவம், பொறியியல் படிப்பை போல் படிப்பதால் ஞான நிலையை அடைய முடியாது, ஞான நிலையை ஆன்மிகத்தால் அடைய முடியும் என்பது தவறு, ஆன்மீகத்துக்கும் ஞான நிலையை அடைவதற்கும் சம்பந்தமே இல்லை. ஞான நிலையை உணர்வின் ஆளுமையாலும், சிந்திக்கும் மூளையின் செயல் திறனாலும், அறிவாலும் மட்டுமே அடைய முடியும்.
ஒவ்வொருவருடைய உணர்வும், மூளையின் செயல் திறனும், அறிவும் வேறுபட்டு இருக்கும். யாரோடும் யாரையும் ஒப்பிட முடியாது.ஒரு சிலரால் என்னுடைய ஆய்வு கட்டுரைகளை படித்த ஒரு சில நாட்களிலேயே ஞான நிலையை அடைய முடியும், பலருக்கு பல ஆண்டுகள் ஆனாலும் அடைய முடியாது காரணம் உணர்வு கட்டுப்படாது, மூளையின் சிந்தனை திறனும் போதாது, அவர்களின் வாழ்க்கை சூழலும் ஒத்துழைக்காது. இதற்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லை.
உலக மக்கள் அனைவரும் வரும் காலத்தில் ஞானத்தின் உச்சத்தை அடைய ஒரே நுழைவு வாயில் “குமார் விதிகள்” என்ற ஆய்வு புத்தகம் மட்டுமே.
ஞானத்தின் உச்சத்தை உலக மக்கள் அனைவரும் அடைய வேண்டும், அமைதியான உலகில் ஆனந்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகவே என்னுடைய எழுத்து பணியை தொடர்ந்து செய்து வருகின்றேன்.
இரா.விஜயகுமாரன்.