4 August 2023
by
Vijayakumaran
சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை வாகனங்களுக்கான வேகத்தடை மட்டுமல்ல, அந்த வழியாக செல்லும் ஒவ்வொரு மனிதனின் பொருளாதார முன்னேற்றத்தையும் தடை செய்யும் வேகத்தடை. இது நம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் தடை.
வாகனங்களுக்காக நம் நாடு இறக்குமதி செய்யும் எரிபொருளில் 20 சதவிகிதம் வேகத்தடையாலேயே அழிக்கப்படுகின்றது, இதை நம்பமுடியவில்லை என்றாலும் இது அறிவியல் பூர்வமான உண்மை.
ஒரு வாகனம் வேகத்தடைக்காக break ஐ பயன்படுத்தும்போது வாகனத்தின் வேகத்தையும், எடையையும் பொறுத்து Momentum loss ஆகின்றது இந்த Moment த்தை மீண்டும் எட்டுவதற்கு அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகின்றது. 1.5 டன் எடையுடைய கார் 60 கிலோமீட்டர் வேகத்தில் சென்று வேகத்தடையில் ஐந்து கிலோ மீட்டர் வேகமாக குறைந்து மீண்டும் 60 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்கு 10 KM ஒரு லிட்டர்க்கு கொடுக்கும் காருக்கு ஒரு கிலோமீட்டர் செல்லும் தூரம் குறைகின்றது.
டோல்கேட்டில் பணம் கொடுப்பது போல் ஒவ்வொரு வாகனமும் ஒவ்வொரு வேகத்தடையை கடக்கும் போதும் ரூபாய் பத்துக்கு பதில் 10 ரூபாய் எரிபொருளை செலவு செய்து விட்டு தான் செல்கின்றது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
50 kmக்கு ஒரு டோல்கேட்டில் 50 ரூபாய் கொடுப்பதை பாரமாக நினைக்கும் நாம் 10 கிலோமீட்டர் கடப்பதற்கு பத்து வேகத்தடைக்கு 100 ரூபாய் கொடுப்பதை பாரமாக நினைப்பது இல்லை, காரணம் நம் கையில் இருந்து போகாமல் மறைமுகமாக செலவு ஆவதால் சராசரி மக்களால் இதை உணர முடியவில்லை.
விபத்தை தடுப்பதற்கு தான் வேக தடை அமைக்கப்படுகின்றது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, காரணம் வேகத்தடையால் தவிர்க்கப்பட்ட விபத்தை விட வேகத்தடையால் ஏற்படும் விபத்துக்களே அதிகம்.
பிரதான சாலையில் பயணிப்பவர்களுக்கு தான் சாலையில் முக்கியத்துவம் வேண்டும் என்பதை மக்களும், துறை சார்ந்தவர்களும் புரிந்து கொண்டால் வேகத்தடை தேவைப்படாது.
வேகத்தடையை கவனிக்காமல் (வெள்ளை வண்ணம் பூசாததால் )இயல்பான 60 கிலோமீட்டர் வேகத்தில் வேகத்தடையை கடந்தால் அவருக்கு மரண தண்டனை தான் என்பதை உறுதி செய்யும் வகையில் வேகத்தடைய அமைக்க எந்த சட்டம் அனுமதி கொடுத்துள்ளது. தனிமனிதன் சாலையில் வேகத்தடையை அமைப்பது இல்லை, சாலை பொறியாளர்களின் அனுமதி பெற்று தான் அமைக்கப்படுகின்றது, பொறியாளர்களுக்கு அறிவியல் அறிவு இல்லையா அல்லது இயல்பான 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்பவர் வேகத்தடையை பார்க்கவில்லை என்றால் அவர்களுக்கு மரணம் தான் சரியான நீதி என்று நினைக்கிரார்களா என்று தெரியவில்லை.
வேகத்தடையின் வடிவமைப்பு ஒரு வாகனத்தின் வேகத்தை தடை செய்யும் அளவிற்கும் இருக்க வேண்டும், அதே சமயம் 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவர் வேகத்தடையை கவனிக்கவில்லை என்றாலும் அவருடைய வாகனத்திற்கும், உயிருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத வகையிலும் இருக்க வேண்டும், இதுவே சரியான ஒரு பொறியாளரின் அடையாளமாக இருக்க முடியும்.
வேகத்தடையை தவறாக அமைக்க கூடாது என்று பொறியாளர்கள் செய்யும் தவறையும் மக்கள்தான் சுட்டிக்காட்ட வேண்டும், விலை நிலங்களை அழித்து சுரங்கம் அமைக்க கூடாது என்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கும் மக்கள்தான் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், வேகத்தடை இந்திய பொருளாதாரத்திற்கான தடை என்பதையும் மக்கள் தான் அரசுக்கு சொல்ல வேண்டும் என்றால், படித்து பதவியில் இருப்பவர்களுக்கு அறிவு இல்லையா ?
அனைத்தையும் மக்களே போராடி தான் பெற வேண்டும் என்பதால்தான் மக்களாட்சி என்று பெயரோ !
in Social