தஞ்சை பெரிய கோயிலின் 2020 குடமுழுக்கு தமிழர்களின் அறியாமைக்கும், அடிமைத்தனத்துக்கும் முழுக்காக அமைய வாழ்த்துக்கள். தமிழில் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று போராடிய, ஆதரவு கொடுத்த தமிழர்களில் 90 சதவிகிதத்தினர் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதி தான் நடத்துகின்றார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது, மறைத்து விடக்கூடாது. தமிழ் மொழியை நேசிக்கின்ற ஒவ்வொருவரும் அவர்களுடைய குடும்ப சுபநிகழ்ச்சிகளை தமிழில் செய்ய முன்வரவேண்டும்.
அண்ணாவின் மொழிப் புரச்சியால் 60 ஆண்டுக்கு முன்பே மக்கள் மொழி விழிப்புணர்வு பெற்று சமஸ்கிருதத்தை தன்னுடைய வீட்டு நிகழ்ச்சிகளில் தவிர்த்திருந்தால், இன்று நீதிமன்றம் சென்று நம்முடைய உரிமையை போராடி பெறவேண்டிய அவசியம் இருந்திருக்காது.
மக்கள் ஒவ்வொருவரும் தன் கடமையை செய்யாமல் ஆட்சி செய்தவர்களை குறைகூறுவது பதவி வெறிபிடித்த அரசியல்வாதிகளில் தூண்டுதல்.
ஜனநாயக நாட்டில் யாரும் நம்மை அடிமைப்படுத்த முடியாது. விடுபட நாம் முயற்சி செய்தால் விடுதலை நம் கையில்.
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுவது தமிழனுக்கு கிடைத்த வெற்றி அல்ல, கதவை பூட்டி சாவியை தன் கையில் வைத்துக் கொண்டு வெளியே வர முடியாமல் தவித்த சமுதாயத்திற்கு கிடைத்த சுய விடுதலை திருநாள் இன்று.