சாதியும், மதமும் சூரியன், பூமி, சந்திரன் போன்று இயற்கையாகவே உருவான கூட்டமைப்புகள். சாதி மதம், என்ற கூட்டமைப்பை ஒன்றிணைத்தால் வேறு ஒரு பெயரில் பல புதிய கூட்டமைப்புகள் உருவாகும் என்பது இயற்கையின் நீதி.இதைப் புரிந்து கொண்டால் சாதி என்பது தீண்டத்தகாத வார்த்தை அல்ல என்பது தெரியவரும்.
நாம் சாதி என்ற பெயரில் பல கூட்டமைப்பாக இருப்பது தவறில்லை ஆனால் அனைத்து கூட்டமைப்புக்கும் இடையில் சமத்துவம் இருக்க வேண்டும் அதற்காக தான் இட ஒதுக்கீடு சமுதாய நீதியாக பார்க்கப்படுகின்றது. சமத்துவம் ஏற்பட சாதிய கட்டமைப்பை சிதை ப்பது என்பது தேன் கூட்டைக் கலைப்பதற்கு சமம்.
இங்கு யாரும் சாதி வெறியர்களும் இல்லை, சாதி பற்றாளர்களும் இல்லை, தன்னுடைய பிழைப்புக்காக பலர் போட்டுக்கொண்ட முகமூடிதான் சாதிபற்றாளர் என்ற முகமூடி.
புலிக்குப் பயந்தவர்கள் என் மீது படுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி சமுதாய கூட்டமைப்புக்குள் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் முயற்சியே சாதி பற்று.
சாதியைப் பற்றிய புரிதல் இருப்பவர்கள் யாரும் சாதியை உச்சரிக்க தகாத வார்த்தையாக நினைக்கமாட்டார்கள்.
சாதிய கட்டமைப்பை பாதுகாப்போம் !
சாதிய கட்டமைப்பு களுக்கு இடையே சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் !!
அரசியலில் சாதிய அரசியல் கட்சிகளை தடை செய்வோம் !!!