18 December 2017
by
Vijayakumaran
இந்த கட்டுரையை சாதி விருப்பு வெறுப்பு இல்லாமல் அனைவரும் படியுங்கள் அப்போதுதான் சமுதாயத்தில் சாதி ஒற்றுமை உருவாகும்.
சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வேண்டும்.
இதை மத்தியில் BJP சொன்னால் மதவேற்றுமை, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் சொன்னால் சாதி ஒற்றுமை,இதன் பெயர்தான் பகுத்தறிவு.
ஒருவன் அவன் சாதி கலாசாரங்கள்படி அவன் பிள்ளைகளுக்கு அதே சாதியில் திருமணம் செய்ய நினைப்பதை ஆணவம் என்று எப்படி சொல்ல முடியும்.
ஒழுக்கம் இல்லாதவன் ஆணா, பெண்ணா, என்று கூட பார்க்காமல் திருமணம் செய்துகொள்வது அவர்கள் விருப்பம், அதை மற்றவர் மீது ஓட்டுக்காக அரசியல் தலைவர்கள் திணித்து சாதிப் பிரிவை மக்களிடம் ஏற்படுத்தி பிழைப்பது சரியா?.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது கலாச்சாரத்தை பாதுகாக்க சட்டம் இருப்பது போல் சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் நமது கலாசாரத்தை பாதுகக்கவும், சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், திருமணம் செய்ய வேண்டும் என்றால், பெற்றோரின் ஒப்புதல் வேண்டும் என்ற சட்டம் அரசு கொண்டுவர வேண்டும்.
பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற சாதிக் கலப்பு திருமணம் சாதி ஒற்றுமையையும், பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் நடக்கின்ற சாதிகலப்பு திருமணம் சாதி கலவரத்தையும், உண்டுபண்ணுகின்றது என்ற உண்மை நிலையை புரிந்து கொலைக்கும், தூக்குத் தண்டனைக்கும், மாற்றாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய சட்டத்தை அரசு விரைவில் கொண்டுவந்து சமுதாய ஒற்றுமையை பாதுகாக்கவேண்டும்.
நாம் அனைவரும் நாம் பெற்ற அறிவை மற்றவரும் பெறவேண்டும் என்பதற்காக தான் எழுதுகின்றோம், இதில் கண்ணியமும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும் மாற்றுக் கருத்தை தரம் தாழ்ந்து விமர்சிக்க கூடாது. நம்முடைய குடும்பமுறை தான் உலகிலேயே மேன்மையான கலாச்சாரம் இதை யாரும் மறுக்க முடியாது.அதனால்தான் நம்முடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக உள்ளது.குடும்பக் கட்டுப்பாடு இல்லாமல் அவர் அவர் ஒரு முடிவை எடுத்தால் குடும்பம் சிதைந்துவிடும், குடும்பம் சிதைந்தால் ஒழுக்கம் இல்லாத, கட்டுப்பாடு இல்லாத,சமுதாயம் உருவாகும் அப்போது தனிமனிதனின் பாதுகாப்பு கேள்விக்குறி தான்.
ஒரு மனிதனுக்கு கட்டுப்பாடும் தேவை, சுதந்திரமும் தேவை. நாம் மனிதர்கள் மிருகம் அல்ல.சாதியைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம் தேவை.
கல்வியும், வேலையும், சாதி அடிப்படையில் உள்ளது.
அரசியல் கட்சிகள் சாதி அடிப்படையில் உள்ளது.
சட்டம் சாதி அடிப்படையில் உள்ளது.
திருமணம் சாதி அடிப்படையில் உள்ளது.
ஒருவனுடைய பழக்கம் சாதி அடிப்படையில் உள்ளது.
சாதிக்கு ஒரு சங்கம் உள்ளது.
சாதி ஒழிய வேண்டும் என்பவர்கள் அவர்கள்வாழ்கையில் இதை ஒழித்திருக்கின்றார்களா?
இது அனைத்தும் இருந்தும் சாதி இல்லை என்று நடிப்பவன் சாதி வெறியன். சாதி ஒற்றுமைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்று சொல்பவன் சாதி வெறியன் அல்ல உங்களில் ஒருவன்.
நம்முடைய கலாசாரத்தை பாதுகாக்கவும்,நம்முடைய குடும்ப அமைப்பை பாதுகாக்கவும், புதிய சட்டம் தேவை என்று நான் சொல்வதில் என்ன தவறு உள்ளது.
நமது கலாசாரத்தை பின்பற்றாதவர்களும்,மேற்கத்திய நாகரிகத்தை விரும்புகின்றவர்களும்,அவர்களுடைய பிள்ளைகளை அனுமதித்தால் புதிய சட்டம் தடை செய்யப்போவதில்லை.
ஆடு நனைகின்றது என்று ஓநாய் ஏன் கவலைப்பட வேண்டும்.
வீடுகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக அரசிடம் சட்டம் என்கின்ற பூட்டு கேட்கின்றோம் விருப்பம்உள்ளவர்
பூட்டை பயன்படுத்தி வீட்டின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வார்கள்.விருப்பம் இல்லாதவர் பயன்படுத்தமாட்டார்கள்.
நம் வீட்டை பூட்டிக் கொள்ள கூடாது என்று திருடன் சொல்வதற்கு என்ன உரிமை உள்ளது.
எந்த சாதியில் பிறந்தவராக இருந்தாலும் இரண்டு பேருக்கும் மேல் ஒன்று சேர்ந்தால் தன் சாதி உணர்வோடுதான் பேசுகின்றோம்,வெளியுலகில் சாதியை வெறுப்பவன் போல் அனைவரும் நடிக்கின்றோம். மலை உச்சியில் சாமி தெரியவில்லை என்று நாம் சொல்லிவிட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என்பதற்காகவே கடவுள் தெரிகின்றது என்று நடிக்கின்றோம். நம் அனைவரையும் நடிக்க வைப்பவன் தான் உண்மையான சாதி வெறியன்.
ஆடு திருடிய வடிவேலுக்கு ஆட்டை பரிகொடுத்தவன் பயந்து நான் கனவுதான் கண்டேன் என்று சொல்வது போல் நாம்ஒவ்வொருவரும் நம் உரிமையை கேட்க அஞ்சுகின்றோம், இந்த பயம்தான் சமுதாயத்தில் அழுத்தமாக மாறி கலவரமாக உருவாகின்றது
50 ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்கு முன் காதலிப்பதை ஒழுக்கக் கேடான செயலால் எண்ணினோம் அதனால் குடும்ப அமைப்பைப் பாதுகாக்க அப்போது சட்டம் தேவைப்படவில்லை, இப்போது உள்ள சூழலில் குடும்ப அமைப்பை பாதுகாக்க புதிய சட்டம் தேவை என்பதை அனைவரும் உணரவேண்டும்.
குலத்தொழில் முறையை சட்டத்தின் மூலம் ஒழித்து சாதிக் கொடுமை என்ற பாம்பை நம் முன்னோர்கள் அடித்து கொன்றுவிட்டார்கள் இப்போது ஓட்டுக்காக செத்த பாம்பை அடித்து கொண்டு அரசியல் செய்கின்றார்கள்.
சாதி என்ற கலாச்சாரத்தை சட்டத்தால் மக்களிடமிருந்து ஒழிக்க முடியாது, கல்வி,செல்வம், தொழில், இவற்றால் புதிய கலாச்சாரம் உருவாகும்போது பழைய சாதி கலாசாரம் தானாகவே மறைந்துவிடும் புதிய கலாச்சாரம் பிறப்பால் வேற்றுமையை ஏற்படுத்தாமல் கல்வி, செல்வம், தொழில், இவற்றால் மக்களை வேற்றுமைபடுத்தும். அப்போது புதிய சட்டம் தேவைப்படும், வேற்றுமையை தனித்துவமாக என்னும் மனிதனிடம் வேற்றுமை உணர்வை அழிக்க முடியாது.இந்த புரிதலோடு வேற்றுமையில் ஒற்றுமைக்காண புதிய சட்டம் உருவாக்க வேண்டும் அதற்கு மலை உச்சியில் கடவுள் தெரிவது உண்மைதான் என்று நடிக்காமல், நம்முடைய போலியான சாதிய அணுகுமுறையால் இனி ஒரு சங்கர் கொடூரமான முறையில் சாலையில் கொலை செய்யப்படக் கூடாது என்றும், குடும்ப பிரிவினால் இனி ஒரு குடும்பம் தற்கொலை செய்துகொள்ளக் கூடாது என்று நீங்கள் விரும்பினால்இந்த கட்டுரையை அனைவருக்கும் பகிர்ந்து குடும்பத்தோடு வாழுங்கள்.
காதல்,சாதி, தூக்குத்தண்டனை, இவைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை நான் எழுதிய புத்தகத்தில் இருக்கின்றது அதை படித்தால் உங்கள் கேள்விக்கான பதில் கிடைக்கும்.
பக்கம். 59,90,110.
நான் சாதி வெறியனல்ல சிந்தனையாலன் மக்கள் அனைவரும் சமம் என்ற உயர்ந்த நிலையில் இருந்து எது சரியான கல்வி, கடவுள்இருக்கா, எது சரியான காதல், மொழிசுதந்திரம், சாதி ஒற்றுமை, மதம் ஒற்றுமை, தூக்குத் தண்டனை தேவையா, விதி உன்மையா, எது அறிவு,ஆகிய அனைத்தையும் அறிவியல்படி ஆய்வு செய்து கட்டுரை எழுதி இருக்கின்றேன்,படித்து பயன்பெறுங்கள்
in Social