சாதி என்பது தீண்ட தகாத வார்த்தை அல்ல,அது ஒரு கலாச்சாரத்தின் அடையாளம், முகவரி. சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் எந்த சாதிகலாச்சாரத்தை ஒழிப்பது,எதை அனைவரும் பின்பற்றுவது ?இதற்கு ஒற்றைச் கலாசாரம் உருவாக வேண்டும்.
இதை மத்தியில் BJP சொன்னால் மதவேற்றுமை, தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் சொன்னால் சாதி ஒற்றுமை,இதன் பெயர்தான் பகுத்தறிவு.
ஒருவன் அவன் சாதி கலாசாரங்கள்படி அவன் பிள்ளைகளுக்கு அதே சாதியில் திருமணம் செய்ய நினைப்பதை ஆணவம் என்று எப்படி சொல்ல முடியும்.
ஒழுக்கம் இல்லாதவன் ஆணா, பெண்ணா, என்று கூட பார்க்காமல் திருமணம் செய்துகொள்வது அவர்கள் விருப்பம், அதை மற்றவர் மீது ஓட்டுக்காக அரசியல் தலைவர்கள் திணித்து சாதிப் பிரிவை மக்களிடம் ஏற்படுத்தி பிழைப்பது சரியா?.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற நமது கலாச்சாரத்தை பாதுகாக்க சட்டம் இருப்பது போல் சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் நமது கலாசாரத்தை பாதுகக்கவும், சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மாற்று சாதியில் திருமணம் செய்ய வேண்டும் என்றால், பெற்றோரின் ஒப்புதல் வேண்டும் என்ற சட்டம் அரசு கொண்டுவர வேண்டும்.
பெற்றோரின் சம்மதத்தோடு நடக்கின்ற சாதிக் கலப்பு திருமணம் சாதி ஒற்றுமையையும், பெற்றோர்களின் சம்மதம் இல்லாமல் நடக்கின்ற சாதிகலப்பு திருமணம் சாதி கலவரத்தையும், உண்டுபண்ணுகின்றது என்ற உண்மை நிலையை புரிந்து கொலைக்கும், தூக்குத் தண்டனைக்கும், மாற்றாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய புதிய சட்டத்தை அரசு விரைவில் கொண்டுவந்து சமுதாய ஒற்றுமையை பாதுகாக்கவேண்டும்.