Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    சாதி

  • All Blogs
  • Social
  • சாதி
  • 18 April 2021 by
    Vijayakumaran
    முற்போக்கு சிந்தனையாளர்களுக்கான ஆய்வுக்கட்டுரை இது, நீங்கள் முற்போக்கு சிந்தனையாளரா, அல்லது முரண்பாடான சிந்தனையாளரா என்பதை இந்த கட்டுரையை படித்த பிறகு முடிவு செய்து கொள்ளுங்கள். செயலில் மூன்று விதமான மனிதர்கள் உள்ளனர், 1)நடைமுறையிலுள்ள பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிப்பவர்கள், 2)நடைமுறைப் பழக்கத்திற்கு மாற்றாக புதிய உயர்நிலைக்கு மாறுபவர்கள், 3)நடைமுறைப் பழக்கத்திற்கு முரணாக பழைய முறைக்கே மாறுபவர்கள், இதில் பழமையை கடைபிடிப்பவர்களாளும், புதிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாளும் இந்த சமுதாயத்திற்கு எந்த கேடும் இல்லை. ஆனால் இந்த மூன்றாம் நிலையில் உள்ள முரண்பாடானவர்களால்தான் இந்த சமுதாயத்திற்கு கேடு, இவர்களுடைய சிந்தனை நடைமுறைக்கு முரண்பாடாக இருக்குமே தவிர முற்போக்காக இருக்காது. முற்போகுக்கும், முரண்பாட்டுக்கும் இடையே சிறு வேற்றுமை தான் உண்டு. நடந்து போன ஆதிமனிதன் முன்னேறி மிதிவண்டியில் செல்லும் நிலையில் மோட்டார் வண்டியில் பயணிக்க உதவி செய்தால் முற்போக்கான செயல், ஆனால் மிதிவண்டியில் சென்றவனை மீண்டும் கற்காலம் மனிதனைப் போல் நடக்க செய்தால் பிற்போக்கான, முரண்பாடான செயல். இரண்டிலும் மாற்றம் ஏற்படுகின்றது ஆனால் ஒன்று முன்னோக்கி மற்றொன்று பின்னோக்கி என்பதை புரிந்துகொண்டால் எது முற்போக்கு எது முரண்பாடான பிற்போக்கு என்பது தெரியவரும். சாதி என்பது பல குடும்பங்களின் கூட்டமைப்பு, குடும்பம் என்ற நாகரீகம் வளராமல் இருந்திருந்தால் சாதி என்ற அமைப்பே உருவாகி இருக்காது. சாதி குடும்ப நாகரீகத்தின் உச்சம். நம்முடைய நாகரிகம் உலக மனித சமுதாயத்துக்கே முன்னோடியானது, நம்முடைய நாகரிகத்தின் பெருமை தெரியாமல், குடும்ப அமைப்பே இல்லாத மேற்கத்திய நாட்டில் சாதி இல்லை என்று சொல்லி நம்மை நாமே இழிவு படுத்திக் கொள்வது முற்போக்கா?அல்லது பிற்போக்கு சிந்திப்பீர் ! மிருகமாக வாழ்ந்த மனிதனின் உணர்வை அடக்கி, உறவுக்குள் அடைத்த மூத்தகுடி நாம் தான். நம்மை பார்த்து தான் குடும்ப உறவு முறையை உலகமே கற்றுக் கொள்ள முயற்சிக்கின்றது. இந்தப் பெருமை தெரியாமல் ஒழுக்கமில்லாத, உணர்வை கட்டுப்படுத்த முடியாத முரண்பாடான பிற்போக்குவாதிகளால் உருவாக்கப்பட்டதே காதல். “திருமணத்திற்கு முன் காதல் “என்பது கற்கால மனிதனின் செயல் இது எப்படி முற்போக்காக இருக்க முடியும். சாதியைக் கொடுமையாக்கியதும், காதலை புனிதமாக்கியதும் முற்போக்கா? பிற்போக்கா? சிந்திப்பீர் ! நாகரிகத்தால் வளர்ந்த நம் சமுதாயத்தை சமத்துவத்தால் ஒன்றிணைத்தால் முற்போக்கு. காதலால் குடும்ப நாகரிகத்தை கெடுத்து சாதியை அழிக்க நினைப்பது பிற்போக்கான செயல். சாதி குடும்ப நாகரிகத்தின் வளர்ச்சி என்பதால், சாதியை காப்போம் ! குடும்ப நாகரிகத்தை போற்றுவோம் !!
    in Social
    சாதியும், மதமும் இயற்கையின் நீதி
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us