சாதி, மத நல்லிணக்கத்தில் தமிழகமே முதன்மையான மாநிலம், தமிழகம் அமைதி பூங்கா, சாதி வன்கொடுமையால் தாழ்த்தப்பட்ட மக்கள் யாரும் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டது இல்லை என்பதே இதற்கு சான்று. இந்த பெருமை தமிழர்களையே சேரும் என்று பெருமை பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் விவகாரத்தில் வன்னியர்களை திருமாவளவன் இழிவுபடுத்தி பேசியதை கேட்கும்போது ஒரு அச்சத்தை ஏற்படுத்திருக்கின்றது, காரணம் வருங்காலங்களில் நம்முடைய உடைமைகளை இவர்களிடம் இருந்து பாதுகாக்க முடியுமா என்ற கேள்வியே.
சாதியால் அனைவரும் சமம் என்ற சட்ட பாதுகாப்பு அனைத்து சாதியினருக்கும் இருந்தாலும் கூடுதலாக தாழ்த்தப்பட்டவர்களை பாதுகாக்க சாதி வன்கொடுமை தடுப்புச் சட்டம் (தீண்டாமை தடை சட்டம் )இருக்கின்றது. தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள கொடுத்த சலுகையை இன்று தவறாக பயன்படுத்தி சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றார்கள் என்பதற்கு கடந்த காலங்களில் திருமாவளவன் பேசிய பேச்சுகளும், செயல்களுமே சாட்சி.
சுதந்திர இந்தியாவில் அனைத்து சாதியினரும் சமம் என்ற சட்டப் பாதுகாப்பில் மூன்று தலைமுறையைக் கடந்து இன்றைய தலைமுறையினருக்கு சாதி தீண்டாமை என்றால் என்ன என்று தெரியாத இன்றைய சூழலில், 75 ஆண்டுகளுக்கு முன் பொருளாதாரத்தில் பின்தங்கிய, கல்வியில் பின்தங்கிய, அரசு வேலைவாய்ப்பில் பின்தங்கிய, அரசியல் செல்வாக்கில் பின் தங்கிய, தலித் மக்களுக்கு சிறப்பு பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட தீண்டாமை தடை சட்டம், அவர்கள் அனைத்து துறைகளிலும் வளர்ந்துவிட்ட பிறகும் நீடிப்பதால், தீண்டாமை தடை சட்டத்தால் மற்ற சமுதாய மக்களை தலித் மக்கள் அச்சுறுத்தும் செயல்கள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டுள்ளது. இதற்கு மேல்பாதி நிகழ்வுகளே சாட்சி.
நடக்க முடியாதவனுக்கு கைத்தடி கொடுப்பது மனிதாபிமானம், நடக்க கூடிய பலரில் ஒருவனுக்கு மட்டும் கைத்தடி கொடுத்தால் நிராயுதபாணியாக இருக்கும் மற்றவரை தாக்கும் ஆயுதமாக தான் கைத்தடியை பயன்படுத்துவான் என்பதற்கு மேல் பாதி நிகழ்வுகளே சாட்சி.
மூன்று தலைமுறைக்கு முன் அவர்களின் பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்ட தீண்டாமை தடை சட்டம் என்ற ஆயுத்தை இன்றைய தலைமுறை தலித் மக்கள் தவறாக பயன்படுத்தி மாற்று சமுதாயத்தினரை அச்சுறுத்தி அதன் மூலம் அவர்களுடைய உடமையை அபகரிக்க நினைப்பது சமூக நல்லிணக்கத்திற்கு கேடானது.
மேல்பாதியில் தன் வழிபாட்டுத் தலத்தின் உரிமையை பாதுகாக்க போராடும் வன்னியர்களை சாதி தீண்டாமை தடை சட்டத்தின் மூலம் கைது செய்திருப்பது மிகப்பெரிய அநீதி. இதுபோன்று தமிழகத்தில் பல நிகழ்வுகள் நடந்துள்ளன இதை மாநில அரசும், ஒன்றிய அரசும்,நீதித்துறையும் ஆய்வு செய்து இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழ்நாட்டில் சாதி தீண்டாமை தடை சட்டத்தை நீக்க வேண்டும் இதை துரிதமாக செய்தால் தான் அனைத்து சமுதாய மக்களும் தலித் மக்களுக்கு இணையான பாதுகாப்பு உணர்வோடு வாழ முடியும்.