சாதி ஒதுக்கீட்டுக்குல் பொருளாதார ஒதுக்கீடு காலத்தின் கட்டாயம்
19 October 2019by
Vijayakumaran
தொழில் சார்ந்து சாதி உருவாகியது, பொருளாதாரத்தை சார்ந்து உயர்ந்த சாதி,தாழ்ந்த சாதி, என்ற எண்ணம் மக்களிடம் தோன்றியது.பொருள் படைத்தவன் ஏழையை அடிமைப்படுத்தினான் இதை தான் சாதிக் கொடுமை என்று எண்ணுகின்றோம் பொருள் இல்லாததால் தான் அவன் கொடுமைப் படுத்தப்பட்டான் என்பதை புரிந்து கொண்டால் சாதி நல்லிணக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து சாதியினரும் அனைத்து தொழிலையும் செய்யலாம் என்பதும், கல்வி, வேலைவாய்ப்பில், சாதி ஒதுக்கீடு என்பதும் பொருளாதார முன்னேற்றம் அடைந்தால் ஏழைகள் வறுமையின் கொடுமையில் இருந்து விடுபடுவார்கள் என்ற அரசின் முயற்சியே ஆகும். சாதி அரசியல் செய்கின்றவர்களுக்கு கொடுமையை பற்றி தெரிய வேண்டும் என்றால் கடன் தொல்லையால் வாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்ட பல லட்சம் விவசாய குடும்பத்திடமும்,தொழில் செய்ய கடன் வாங்கிய பணத்தை அடைக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்திடம் கேட்டால் வறுமையின் கொடுமை தெரியவரும். ஒழுக்கம் இல்லாமல் படிக்கின்ற வயதில் மாற்று சாதி பெண்களிடம் காதல் என்ற பெயரில் ஒழுக்க கேட்டில் ஈடுபடுபவரை தண்டித்தால் அதன் பெயர் சாதிக்கொடுமை அல்ல. சாதி கொடுமை இருக்கு என்றால் எத்தனைப்பேர் செல்வம் இருந்தும் வாழமுடியாமல் சாதிக் கொடுமையை தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள், எனக்குத் தெரிந்து ஒருவரும் இல்லை. சேரி, ஊராக மாறவேண்டும் என்றால் சேரியில் இருப்பவர்கள் பொருளாதாரத்தில் உயரவேண்டும், சேரியில் வாழும் ஏழைகள் உயர வேண்டும் என்றால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான ஒதுக்கீடுமுழுவதும் அந்த சமுதாயத்தின் ஏழைக்கு சென்றடைய வேண்டும் அப்போதுதான் சேரி ஒழியும்.60 ஆண்டுகளாக சேரி ஒழியாமல் இருப்பதற்கும், ஏழைகள் முன்னேறாமல் இருப்பதற்கும் காரணம் அரசு அல்ல, சாதி அரசியலே காரணம். நான் MBCவகுப்பைச் சார்ந்தவர் கிராமத்து ஏழைக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகையை பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் உள்ள நான் தட்டிப் பறிக்கின்றேன். ஏழை எப்படி முன்னேறுவது !சாதி ஒதுக்கீட்டுக்குல் பொருளாதாரஒதுக்கீடு காலத்தின் கட்டாயம். சேரி முன்னேறவில்லை என்பதை காட்டி நகரத்தில் வசதியாக வாழ்கின்ற தாழ்ந்த ஜாதியினர்தான் அரசின் சலுகைகளை முழுவதும் றஅனுபவிக்கின்றார்கள்,இதை சேரியில் இருக்கும் ஏழைகள் புரிந்துகொண்டு பொருளாதார கொடுமையிலிருந்து விடுபடபோராடினால் தான் உரிமையை பெறமுடியும்,அப்போதுதான் சேரி நகரமாக மாறும். அதுவரை சாதிக்கொடுமை என்ற மாயையில்மூழ்கியே இருக்க வேண்டியதுதான்