Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    புதிய பெரியாரியம்

  • All Blogs
  • Social
  • புதிய பெரியாரியம்
  • 4 January 2022 by
    Vijayakumaran
    பெரியார் கடவுள் நம்பிக்கைக்கு எதிரானவர் அல்ல ! கடவுளின் பெயரால் மனிதர்களுக்குள் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே கடவுளை பெரியார் எதிர்த்தார் என்று கூறும் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள், பெரியார் சாதியை எதிர்க்கவில்லை, ”சாதியால்“ உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திய தாலேயே சாதியை எதிர்த்தார் என்று புதிய பெரியாரியம் பேசும் காலம் நெருங்கிவிட்டது. பெரியார் வாழ்ந்த காலத்தில் அரசு பதவிகளில் உயர் சாதியைச் சேர்ந்தவர்களே இருந்ததால், சாதியவடிவில் இருந்த அதிகார வர்க்கத்துக்கு எதிராக சாமானியமக்களுக்காக பெரியார் போராடினார். பெரியாரின் கொள்கை “சமத்துவம் “ சமத்துவத்திற்கு எதிராக எது இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் திராவிட இயக்கங்களின் கொள்கை என்றால் !இன்று அனைத்து சாதியினரும் சமூக நீதி அடிப்படையில் அரசு பதவிகளில் உள்ள நிலையில், ஒட்டுமொத்த லஞ்சம் வாங்கும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக பெரியாரின் பணி தொடர, சாமானிய மக்களுக்காக இன்று திராவிட இயக்கங்கள் போராட வேண்டும். புதிய சட்டங்களை இயற்றவேண்டும். குடி மக்களின் வரி பணத்தில் பெரும்பகுதி 2 சதவீதமே உள்ள அரசு ஊழியர்களுக்கு மட்டுமே ஊதியமாக செலவு செய்யப்படுகின்றது. குடி மக்களின் சராசரி வருமானத்தை விட அரசு ஊழியர்களின் சராசரி சம்பளம் பலமடங்கு அதிகமாக உள்ளதால் சமுதாயத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அரசு ஊழியர்களாள்தான் அதிகம் ஏற்படுகின்றது. VAOமுதல் IAS வரை லஞ்சம் அனைத்துத் துறையிலும் பல்கிப் பெருகிவிட்டது. லஞ்சம் வாங்காதவர் பிழைக்கத் தெரியாதவர், லஞ்சம் கொடுக்காதவர் உலக நடப்பு தெரியாதவர் என்ற நிலை உருவாகிவிட்டது, இதற்கு தற்போது நடைமுறையில் உள்ள கொக்கு தலையில் வெண்ணெய்யை வைத்து கொக்கைப் பிடிக்கும் லஞ்ச ஒழிப்பு சட்டமே காரணம். நடைமுறையில் உள்ள சட்டத்தால் எந்த பயனும் இல்லை என்பதற்கு இன்று அரசு அலுவலகங்களில் லஞ்சம் இல்லாமல் எந்த நகர்வும் இல்லை என்பதே சான்று. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுப்பதற்கு இன்றைய கணினி மயமான சூழலில் தனியார் நிறுவனத்தை போல் வாடிக்கையாளர்களின் feedback யை கணினியில் பதிவிட்டு முகவரின் செயல்திறனை தீர்மானிப்பது போல், பொதுமக்களிடம் தொடர்பில் உள்ள அரசு அதிகாரிகளின் செயல் திறனையும் கண்டு அறிய பயனாளர்களின் feedback யை அதிகாரிகள் திருத்த முடியாத படி கணினியில் பதிவிட்டு அரசு அதிகாரிகள் மீது துறை சார்ந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் சட்டத்தால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். இன்றைய சூழலில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதால், லஞ்சம் வாங்கும் உயர்அதிகாரி நிச்சயம் தனக்கு கீழ் பணிபுரியும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க மாட்டார். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியான MLAகள் மக்களின் feedback முறையை சட்டமாக்கினால் மட்டுமே லஞ்சத்தை ஒழிக்க முடியும். “மனமிருந்தால் மார்க்கம் உண்டு “ ஆட்சியாளர்கள் நினைத்தால் feedback முறையால் ஒரே நாளில் லஞ்ஞத்தை ஒழித்து விட முடியும் ! வாழ்க அதிகார வர்க்கத்திற்கு எதிரான புதிய பெரியாரியம்.
    in Social
    சாதி
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us