மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் நிகழ்வுகளை பார்க்கும்போது வேற்று சமுதாயத்தினர் இடமிருந்து நம் உரிமையையும், உடைமையையும் பாதுகாத்துக் கொள்ள வலுவான அரசியல் சார்பு இல்லாத வன்னியர் நலச்சங்கம் தேவை என்பது காலத்தின் கட்டாயம்.
சாதி சங்கம் அரசியல் கட்சியாகவும், அரசியல் கட்சி சாதி சங்கமாகவும் சிறப்பாக செயல்பட முடியாது என்பதற்கு வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியுமே சான்று.
சாதி சங்கத்துக்கு சாதி பற்று மட்டும் இருந்தால் போதும், ஆனால் ஒரு மாநில கட்சியாக மாறும்பொழுது மாநில பற்று வேண்டும், மொழி பற்று வேண்டும், அனைத்து சாதியினர் மேலும் பற்று வேண்டும், அனைத்து மதத்தின் மீதும் பற்று வேண்டும். அரசியலுக்காக பல பற்றை பற்றிக்கொள்ளும் பொழுது எந்த சாதிக்காக, எந்த நோக்கத்திற்காக சங்கம் உருவாக்கப்பட்டதோ அதிலிருந்து விலகி செயல்படக்கூடிய சூழல் ஏற்படுகின்றது.
வன்னியர்கள் அனைத்து அரசியல் கட்சியிலும் பொறுப்பில் இருக்கின்றார்கள், அரசியல் அவரவர் விருப்பம், உரிமை.அதன் அடிப்படையில் கட்சி பாகுபாடு இல்லாமல் சாதியால் ஒன்றிணைந்து அமைத்த வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சி என்று அரசியல் கட்சியாக மாற்றியது வன்னியர்களின் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தி விட்டது. வன்னியர்களை மீண்டும் அரசியல் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சாதியால் ஒன்றிணைக்க புதிய வன்னியர் சங்கம் காலத்தில் கட்டாய தேவை.
புதியதாக உருவாகக் கூடிய வன்னியர் சங்கம் ஜனநாயக அறிவியல் படி இயங்க வேண்டும், புயலைப் போல் மையத்தை வெற்றிடமாக வைத்துக்கொண்டு தலைமையே இல்லாமல் இயங்க வேண்டும், ஜனநாயகத்தில் எந்த ஒரு தனி மனிதனிடமும் அதிகாரத்தை குவிக்க கூடாது, தனி மனிதனை மையப்படுத்தி ஒரு இயக்கம் செயல்பட்டால் அது தனி மனிதனின் நலனை சார்ந்து தான் செயல்படும், உறுப்பினர்களின் நலன் சார்ந்து செயல்படாது.
அனைத்து துறையில் இருந்தும் ஆளுமை மிக்க ஆயிரம் செயற்குழு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து, தலைமையே இல்லாமல் அலுவலக நிர்வாகத்திற்காக மட்டும் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் செயலாளரையும், பொருளாளரையும் மாற்றக்கூடிய வகையிலும்,உறுப்பினர்களே செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கவும், செயற்குழு உறுப்பினர்கள் சேர்ந்தே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் படியும்,புதிய வன்னியர் சங்கத்தின் விதியை உருவாக்கி, அனைத்து வன்னியர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து வன்னியர்களின் நலனை மட்டுமே மையமாக வைத்து, தேர்தலில் எந்த அரசியல் கட்சிகளுக்கும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காமல் புதிய வன்னியர் சங்கம் செயல்பட்டால் தான் அனைத்து வன்னியர்களும் பாதுகாப்போடு வாழ முடியும்.
ராமதாசுக்கும், அவருக்குப் பிறகு அன்புமணிக்கும் வன்னியர்கள் கொத்தடிமையா அவர்களுடைய தலைமையின்கீழ் வன்னியர் சங்கம் தொடர்ந்து இயங்குவதற்கு. தலைமை இல்லாத கூட்டமைப்பே உண்மையான ஜனநாயக அமைப்பு.