NLC ஏன் வெளியேற வேண்டும் ?
1). விளைநிலங்களில் தொழிற்சாலைகளை அமைத்தால் தொழிற்சாலையை மூடிய பிறகு அந்த இடத்தில் மீண்டும் விவசாயம் செய்யலாம் ஆனால் சுரங்கம் அமைத்தால் அந்த இடத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் விவசாயம் செய்ய முடியாது, வரும்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நம் யாருக்கும் உரிமை இல்லை!
2). NLC நிறுவனம் தூவங்குவதற்கு முன் பத்து அடியாக இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 400 அடியாக அதிகரித்துவிட்டது இதனால் NLC ஐ சுற்றி உள்ள பகுதியில் விவசாயம் பாதித்துவிட்டது.
3). NLC நிறுவனம் கரியை எரித்து மின்சாரம் எடுப்பதால் கடலூர் மாவட்டம் முழுவதும் காற்று மாசாக்கப்பட்டு உள்ளது, இந்த பகுதி மக்கள் அனைவருக்கும் காற்றுமாசால் பல உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகின்றது.
மக்கள் இந்த மூன்று காரணத்தால் அவர்கள் அனுபவிக்கும் துன்பத்தை முன்பே அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் இது சுற்றுச்சூழலை பற்றி படித்தவர்களுக்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்களுக்கான அரசாக இருந்திருந்தால் நிபுணர்களின் அறிவுரையைப் பெற்று NLC யை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே வெளியேற்றி இருக்க வேண்டும்.
என் பார்வையில் NLC க்கு நிலம் கொடுப்பவர்களும், NLC யும் வியாபாரிகளே, இவர்கள் இருவரும் லாபத்திற்காக விவசாய நிலத்தை அழிக்க கூட்டு சேர்ந்திருப்பதை நீதித்துறை அனுமதிக்ககூடாது.
விவசாயிகளுக்கு அதிக இழப்பீடை கொடுக்க வேண்டும், வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக NLC யை எதிர்த்து பொதுமக்கள் போராடவில்லை, அது பொதுமக்களின் வேலையும் அல்ல.
ஒருபோக நெல் பயிர் அழிக்கப்படுவதையே நம்மால் பார்க்க முடியவில்லை ஆனால் இனி பல ஆயிரம் ஆண்டுகள் அந்த இடத்தில் நெல் பயிரிட முடியாது என்பதை எண்ணும்போது வேதனையாகவும் உள்ளது, அச்சமாகவும் உள்ளது. இது மக்களுக்கான ஆட்சியா அல்லது பேராசை பிடித்த வியாபாரிகளின் ஆட்சியா என்று தெரியவில்லை.
வரும் தேர்தலில் NLC யை வெளியேற்றுவோம் என்று யார் தேர்தல் வாக்குறுதி கொடுக்கின்றார்களோ அவர்களுக்கே என் வாக்கு என்று இந்த பகுதி மக்கள் தங்களின் தேவையை வெளிப்படுத்தினால் நிச்சயம் நம் விவசாய நிலம் NLC இடம்இருந்து காக்கப்படும்.