நேர்மையில் உண்மை இருக்கவேண்டும், உண்மையில்லா நேர்மை, நேர்மை அல்ல. தர்மத்தில் இரக்கம் இருக்கம் வேண்டும், சுயநலத்துக்காக இரக்கமில்லா தர்மம், தர்மம் அல்ல. விளம்பரத்துக்காக அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தர்மம் செய்வது தர்மம் அல்ல. வலது கை கொடுப்பதை இடதுகை அறியாத வகையில் தர்மம் இருந்தால்தான் அது தர்மம். ஒருவருடைய நேர்மை அவருடைய இயல்பாக இருந்தால் அது உண்மையான நேர்மை. தன்னுடைய நேர்மைக்கு பலனை (புகழை, பதவியை ) எதிர்பார்க்கின்றவர்கள் உண்மையான நேர்மையானவர்கள் அல்ல. பல ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் நேர்மையாக இருந்தும் வெளியில் தெரியவில்லை என்றால் அவர்கள் தான் உண்மையான நேர்மையானவர்கள். சில ஐஏஎஸ், ஐபிஎஸ், அதிகாரிகள் நேர்மையின் உருவமாக வெளியுலகில் தெரிவார்கள், ஆனால் அவர்கள் நேர்மை, உண்மை இல்லா நேர்மை. நேர்மை இல்லாதவன் எதிரிக்கு சமம் என்றால், உண்மையில்லா நேர்மையானவன் துரோகிக்கு சமம். நேர்மையில்லாதவனைவிட, உண்மையில்லாத நேர்மையானவன் மிகவும் ஆபத்தானவன். இரக்கமில்லாத தர்மமும், உண்மையில்லாத நேர்மையும், உன்னை ஏமாற்ற உனக்கு வைக்கும் பொறி.