ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிழைப்புக்காகவே தனக்கான அடையாளத்தை வெளிப்படுத்துகின்றான், எனவே பிழைப்புக்கு இடையூறாக இருக்கின்ற தன்னுடைய அடையாளத்தை பொதுவெளியில் அனைவரும் மறைந்து விடுகின்றோம்.
தன்னுடைய அடையாளம் தன்னை இந்த சமுதாயத்தில் இருந்து அன்னியப்படுத்திவிடும் என்ற அச்சத்தால் தான் பிராமணர்கள் பூணூல் தெரியாமல் ஆடையை அணிந்து கொண்டார்கள், சிகை அலங்காரத்தையும் மாற்றிக் கொண்டார்கள். இது போல் தான் நாம் அனைவரும் தன் மத அடையாளத்தையும் சாதி அடையாளத்தையும் பொதுவெளியில் காட்டுவதை தவிக்கின்றோம்.
இஸ்லாமியர்கள் அவர்களுடைய மத அடையாளத்தை பொதுவெளியில் வெளிப்படுத்துவது அவர்களுக்கு தான் கேடு. இதனால் மற்றவர்களுக்கு துளியளவும் பாதகமில்லை, எனவே பள்ளி சீருடையை கட்டாயப்படுத்துவதும், கட்டாயப்படுத்தாததும் பள்ளி நிர்வாகத்தின் பணி.
தன்னுடைய மத அடையாளத்தால் இந்த சமுதாயத்தில் இருந்து அன்னியப்பட்டு வாழ்வாதாரத்தை இழக்கும் போது தானாகவே திருந்துவார்கள். எனவே இதில் யாரையும் நிர்ப்பந்திக்கவும் தேவையில்லை, இதில் அரசியலும் தேவையில்லை.