27 September 2025
by
Vijayakumaran
கரூரில் ஒரு திரைப்பட நடிகனை பார்க்க சென்றவர்கள் கூட்ட நெரிசலில் இறந்ததற்கு யார் காரணம்?
எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியே காரணம் என்றும், ஆளும்கட்சி கூட்டத்தை கூட்டியவர்களே காரணம் என்றும், சிலர் காவல் துறையே காரணம் என்றும் சொல்கின்றார்கள்,இவர்களின் கருத்துக்கள் அனைத்தும் அரசியல் லாபத்துக்காக சொல்லும் கருத்துக்களே.
நான் இந்த நிகழ்வை அரசியல் நோக்கத்தோடு பார்க்காமல் இதை விபத்தாகவே பார்க்கின்றேன், இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய அறிவியல் ரீதியாக ஆய்வு செய்து இந்த கட்டுரையை எழுதிஇருகின்றேன்.
கடவுளாக இருந்தாலும் எளிதாக பார்த்து விட்டால், நினைக்கும்போதெல்லாம் கடவுளை பார்த்துவிட்டால், நம்முடனே கடவுள் இருந்தால் கடவுளுக்கே மரியாதை இருக்காது.
அறிவியல் தெரிந்தவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் கார் வாட்டர் சர்வீஸ் இல் 150 பார் அழுத்தத்தில் வரும் தண்ணீரைத் தொட்டாலே கையை ஓட்டை போட்டு விடும் அந்த அளவுக்கு ஆபத்தானது,அதே நீரை இரண்டு, மூன்று வளைவு உள்ள 3/4”inch பைப்பில் இணைத்து விட்டால் மிகவும் அழுத்தம் குறைந்து பாதி பைப்பில் மட்டுமே தண்ணீர் வரும்.மின்சாரமும் தண்ணீரை போல் தான் volt,amps, Watts இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது.
watts அதிகமானால் amps அதிகமாகிவிடும்,
volt அதிகமானால் amps குறைந்து விடும்,
volt என்பது மின்னழுத்தம் மின்னழுத்தத்தை குறைத்தால் தான் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும், அதனால் தான் தொலைதூரம் மின்சாரத்தை கொண்டு செல்ல மட்டும் உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்துகின்றார்கள், மக்களின் பயன்பாட்டுக்கு குறைந்தழுத்த 230 volt மின்சாரத்தையே பயன்படுத்துகின்றோம்.
அறிவியல் படி மனிதர்களும் தண்ணீர் மற்றும் மின்சாரம் போல் தான்,மக்களின் எண்ணிக்கை, இடத்தின் அளவு, காலத்தின் அளவு இந்த மூன்றையும் பொறுத்து குறைந்த மக்களைக் கொண்டு அதிக நெருக்கத்தையும் ஏற்படுத்த முடியும், அதிக மக்கள் இருந்தாலும் காலத்தின் அளவை அதிகப்படுத்தி மக்கள் நெருக்கத்தை குறைக்கவும் முடியும்.
திரைப்பட நடிகர்களைப் போல் பிரபலமானவர்கள் மக்களிடம் இயல்பாக பழகாமல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வாழ்வதால் அவர்களை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களுக்கு ஏற்படுகின்றது, இதை பிரபலமானவர்கள் தன்னுடைய செல்வாக்கை உயர்த்திக்கொள்ள பயன்படுத்திக் கொள்கின்றார்கள், இதுதான் பெரும்பாலான பிரபலங்களின் ரகசியம்.
பிரபலங்கள் அதிக மின்னழுத்தம் போல் தங்களை வடிவமைத்துக்கொண்டு மாயையில் வாழ்கின்றார்கள், அது அவர்களுடைய உரிமை. ஆனால் மக்களை சந்திக்க அவர்கள் வரும்பொழுது உயர் மின் அழுத்த மின்சாரத்தை போல் மக்களை கொன்று விடுகின்றார்.
எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் 10 நாள் மக்களோடு மக்களாக ரோட்டில் நடந்து வர சொல்லுங்கள் பத்தாவது நாள் அவரைப் பார்க்க 10 பேர் வர மாட்டார்கள் அழுத்தம் குறைந்து விடும்.
ஒரு நடிகர் அரசியலுக்கு வருவது தவறல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அரசியலுக்கு ஒரு நடிகர் வர முடிவு எடுத்த பிறகு மக்களோடு மக்களாக பழக வேண்டும், நடைபயணம் செய்ய வேண்டும்,நீண்ட நேரம் மக்களுடன் உரையாட வேண்டும் அப்போதுதான் மக்களிடம் அழுத்தம் குறையும், காவல்துறையால் பாதுகாப்பு கொடுக்க முடியும்.“அம்மா மின்னல் “போல் வந்து விட்டுப் போனால் கூட்டநெரிசல் தான் ஏற்படும்.எனவே கரூரில் ஏற்பட்ட விபத்து ஒரு நடிகர் சுயநலத்துக்காக மக்களிடம் அழுத்தத்தை ஏற்படுத்த மக்களுடன் அதிக நேரம் பேசாமல், அதிக நாட்கள் பேசாமல், சிறிது நேரம் தலையை மட்டும் காண்பித்து விட்டு மாநாட்டையே அரை மணி நேரத்தில் நடத்திவிட்டு செல்வதுதான் விபத்துக்கு காரணம்.
வரும் காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காத வகையில் எந்த ஒரு பொது நிகழ்வாக இருந்தாலும் குறிப்பாக ஆன்மீகமாக இருந்தாலும் அரசியலாக இருந்தாலும் மக்கள் நெருக்கத்தை குறைக்க நிகழ்வுகளுக்கு தகுந்தார் போல் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும், பிரபலமானவர்கள் 10 நிமிடம் மட்டும் வந்து செல்ல அனுமதிக்க கூடாது, அவர்களுக்கு வரும் கூட்டத்தை கணக்கில் கொண்டு நாள் முழுக்க மக்களுடன் இருக்க சம்மதித்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும். இந்த அறிவியல் பூர்வமான முறையை காவல்துறை கடைப்பிடித்தால் கூட்ட நெரிசல் எந்த ஒரு நிகழ்வுகளுக்கும் ஏற்படாது. நடிகன் பக்கத்தில் நான்கு பேர் தான் இருப்பார்கள்.
in Social