2 February 2020
by
Vijayakumaran
இடஒதுக்கீடு உரிமையா ?அல்லது கருணையா ? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு சரியா ?அல்லது பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சரியா? இட ஒதுக்கீடு பற்றிய உங்களுடைய கேள்விகளுக்கு பதில் தான் இந்த கட்டுரை. என்னுடைய எழுத்துக்கள் நான் பெற்ற அறிவை தான் வெளிப்படுத்துகின்றது என்பதுஉண்மையாக இருந்தாலும்,நான் இதுவரை இதை எழுதாதது இப்போதுதான் நான் இந்த அறிவைப் பெற்று உள்ளேன் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகின்றது என்று தான் பொருள். என்னைப் போல் மக்களும் இதுவரை இட ஒதுக்கீட்டைத் தவறாக புரிந்து கொண்டதற்கு காரணம், மக்களிடம் அரசியல் தலைவர்கள் சுயநலத்திற்காக சாதியை தீண்டத்தகாத செயலாக கற்பித்ததே.என்னை போல் நீங்களும் சாதியை தவறாக புரிந்திருந்தால் இந்த கட்டுரையை படித்த பிறகு மாற்றிக் கொள்ளுங்கள். சாதி என்பது குடும்ப அமைப்பின் கூட்டுதான் அது கொடுமை அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.குடும்ப ஒற்றுமையின் அடுத்த நிலைதான் சாதி, எனவே சாதியை கொடுமை என்பது மக்களை முட்டாள்களாக்கும் செயல். சாதி என்பது உறவுகளின் கூட்டமைப்பு. உறவுகளை (சாதியை )சிதைத்தால் சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வு குறையும் என்பது உண்மைதான், அது எலிக்குப்பயந்து வீட்டை கொலுத்துவதற்கு சமம். ஒருவன் ஒழுக்கத்தோடும், கட்டுப்பாடோடும், வாழ்வதற்கு குடும்ப உறவும், சாதி உறவும், தான் முக்கியம்.எனவே சாதியை அழித்து சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வை சரிசெய்வது என்பது சாத்தியமல்ல. ஒருவன் பெற்ற செல்வம் அவனுடைய உறவுக்குள்ளேயே இருப்பதாலும், உறவுகள் சாதிக்குள்ளேயே இருப்பதாலும், சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருந்தால் மட்டுமே பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும். இடஒதுக்கீடு என்பது மற்றவர் இடத்தை நாம் பெறுவதற்காகவோ, அல்லது நம் இடத்தை மற்றவர் பெறுவதற்காகவோ இல்லாமல், நம்முடைய இடம் நமக்கு கிடைக்க வேண்டும். என் இடம், என் உரிமை, என்பதை நிலைநாட்டுவதாக இட ஒதுக்கீடு இருக்க வேண்டும். சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு என்பது மாநில மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதத்தில் ஒரு சாதி இருக்கின்றதோ அத்தனை சதவிகிதம் மட்டுமே அந்தசாதிக்கு இட ஒதுக்கீடும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவு என்று ஒன்று இல்லாமல், பிரிவுகளை அதிகப்படுத்தி, அந்தந்த சாதியினருக்கு, அந்தந்த பிரிவில் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். SC/ST, MBC,BCயை சேர்ந்தவர்களும் பொதுப் பிரிவிலும் போட்டியிட முடியும் என்பதும், சாதி மக்கள் தொகையை விட அதிக ஒதுக்கீட்டை எந்த ஒரு சாதி பெறுவதற்கும், உரிமை இல்லை என்று உச்சநீதிமன்றம் ஆணையிட வேண்டும். சாதி ஒதுக்கீடு என்பது பாத்தி கட்டி விவசாயம் செய்வது போன்றது, அனைத்து பாத்திக்கும் சரிசமமான நீர் சென்றடைய வேண்டும். முன்னேறிய சாதியினருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். அனைத்து சாதி ஏழைகளும் முன்னேறுவதற்கு அந்தந்த சாதிக்குள்ளேயே பொருளாதார அடிப்படையில் மாதம் 10 ஆயிரத்திற்கு குறைவாக சம்பாதிப்பவர்களுக்கு 10 சதவீதம் உள் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும். தற்போது உள்ள சாதி அடிப்படையிலான ஒதுக்கீடும், பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடும், தனிமனித உரிமையை பாதுகாக்காமல் அரசியல்வாதிகளின் வாக்குவங்கியை மட்டுமே பாதுகாக்கின்றது. சாதிக்குள் உறவுகள் இருக்கும் வரை, சாதி ஒற்றுமையும், பொருளாதார சமன்பாடும், மக்கள் தொகை அடிப்படையில், சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டால் மட்டுமே சாத்தியம்.
in Social