5 January 2025
by
Vijayakumaran
ஆட்சியாளர்களா, காவல்துறையா, கல்லூரி நிர்வாகமா, அல்லது குற்றம் செய்தவனா. யார் காரணம் ?அரசியல் லாபத்திற்காக எதிர்கட்சிகள் ஆளும் கட்சியையும், காவல்துறையையும் குறை சொல்வது ஏற்புடையது அல்ல. இந்த சமுதாயம் ஒழுக்ககேடான சமுதாயமாக மாறி உள்ள இந்த சூழலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை யாராலும் தடுக்க முடியாது.
தன்னைத்தானே பகுத்தறிவாளி என்றும் முற்போக்குவாதி என்றும் சொல்லிக் கொள்ளும் மூடர்களால் தான் இந்த சமுதாயம் ஒழுக்கக்கேடான சமுதாயமாக மாறிவிட்டது. இதற்கு பல சான்றுகள் இருந்தாலும் நான்கு நாட்களுக்கு முன் என்னுடைய முகநூல் நண்பர் ஆனந்த விகடனால் தேர்வு செய்யப்பட்ட கவிதை என்று, ஒரு கவிதையை பகிர்ந்து இருந்தார். அந்த கவிதையை நான் படித்ததும் சில நாட்களுக்கு முன் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தான் என் நினைவுக்கு வந்தது.
பெண் உரிமைக்கும், பெண் சுதந்திரத்திற்கும், பெண் பாதுகாப்புக்கும், பெண் அடிமைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஆணின் ஒழுக்கக்கேட்டிலும் பெண்ணிற்கு சமத்துவம் வேண்டும் என்றும். பெண்ணின் பாதுகாப்புக்காக அவள் அணிந்திருக்கும் தாலியை அடிமைத்தனத்தின் அடையாளமாக பார்ப்பதும் எவ்வளவு பெரிய முட்டாள்தனம். பிரபல ஊடகங்கள் இது போன்ற எழுத்துக்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதே சமுதாய ஒழுக்கக்கேட்டிற்கு சான்று.
உடல் வலிமையில் ஆணும், பெண்ணும் சமம் அல்ல. எனவே ஆணிடமிருந்து பெண்ணை பாதுகாக்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாக உள்ளது. பெண், ஆணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று யாராவது கேள்விப்பட்டு இருக்கின்றீர்களா? இல்லை என்றால்! ஆண் என்ற மிருகத்திடம் எப்படி சமமாக பெண்களால் பழக முடியும் ?அதற்காக தான் பெண்ணுக்கும், ஆணுக்கும் சில கட்டுப்பாடுகளை பல ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழ்ந்த அனுபவத்தால் உருவாக்கினார்கள். திருமணத்திற்கு முன் ஆணும்,பெணும் பழகுவதை தவிர்த்தார்கள், திருமணத்திற்கு பிறகு மனைவியைத் தவிர அனைத்து பெண்களையும் சகோதரி யாகவும், தாயாகவும் ஒரு ஆண் பார்க்க வேண்டும் என்று ஒழுக்கத்தை கற்பித்தார்கள். பெண்கள் கற்பை உயிருக்கு மேலாக கருத வேண்டும் என்ற ஒழுக்கத்தை கற்பித்தார்கள், இதுபோன்ற சமுதாய ஒழுக்கத்தின் மூலம் ஆண் மிருகத்திடமிருந்து பெண்களை முன்னோர்கள் பாதுகாத்தார்கள்.
கடந்த அறுபது ஆண்டுகளாக ஆடு நனைகின்றது என்று கவலைப்பட்ட ஓநாயை போல் பகுத்தறிவாளி, முற்போக்கு சிந்தனைவாதி என்ற போர்வையில் பெண் சுதந்திரம், பெண்ணுரிமை, பெண் சமத்துவம் என்று பேசி பாதுகாப்பாக இருந்த பெண்களை ஆண்களின் துணை இன்றி பிரித்தெடுத்து தினமும் பல்லாயிரம் பெண்களை பல மனித மிருகங்கள் வேட்டை ஆடுகின்றன.
காதல் என்ற பெயரில் பல பெண்கள் சீரழிக்கப்படுகின்றார்கள், காமத்தின் வெளிப்பாடுதான் காதல், காம உணர்வை கட்டுப்படுத்துபவன் தான் மனிதன். கட்டுப்படுத்த முடியாதவன் மிருகம்.மிருகத்தில் செயலை நியாயப்படுத்தும் மிருகம் தான் திருமணத்திற்கு முன் காதலிப்பதை புனிதம் என்று சொல்கின்றது.அதற்கு மேல் ஒரு படி மேலே சென்று மாற்று சாதியினரை காதலித்து திருமணம் செய்து கொண்டால் அதற்கு சமுதாய சீர்திருத்த திருமணம் என்று சொல்லிக் கொள்கின்றார்கள்.தன்னுடைய ஒழுக்கக்கேடான செயலை சீர்திருத்தம் என்று சொல்லிக் கொள்ள முடியும் என்றால் அது தமிழ்நாட்டில் தான் முடியும். காரணம் முட்டாள்கள் தமிழ்நாட்டில் தான் அதிகம் இருக்கின்றார்கள் இதை ஏற்றுக் கொள்ள.
சாதி சமத்துவம் வேண்டும் என்பதற்கும், சாதி ஒழிய வேண்டும் என்பதற்கும் வேறுபாடு உண்டு. அதனால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் சாதி சமத்துவத்துக்கான சட்டங்கள் உள்ளன, சாதி ஒழிய வேண்டும் என்பதற்கான சட்டங்கள் இல்லை. தமிழ்நாட்டில் தான் அரசியலுக்காக சாதி சமத்துவத்திற்க்கு சாதி ஒழிய வேண்டும் என்று தவறாக பிரச்சாரம் செய்கின்றார்கள். மனிதர்களுக்கு இடையே வேற்றுமைகளை குறைத்தால் மனிதர்களுக்குஇடையே சமத்துவம் உருவாகும் என்பது தவறு.வேற்றுமைகள் தான் ஒரு மனிதனின் அடையாளமே. மனிதனுக்கு மனிதன் மதத்தால், சாதியால், மொழியால், நாட்டால், மாநிலத்தால்,கலாச்சாரத்தால், நிலத்தால், உணவால், கல்வியால், செல்வத்தால் என்று பல வேற்றுமைகள் இருக்கின்றன.இதில் சாதியை மட்டும் ஒழித்து விட்டால் மனிதர்கள் இடையே சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் என்று சொல்வது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.இதை சரி என்று மக்களை நம்ப வைத்தது தான் அரசியல் சூழ்ச்சி.
மொழியால் வேற்றுமை பார்ப்பார்கள், மதத்தால் வேற்றுமை பார்ப்பார்கள், இனத்தால் வேற்றுமை பார்ப்பார்கள், மாநிலத்தால் வேற்றுமை பார்ப்பார்கள் ஆனால் சாதியால் வேற்றுமை பார்க்கக் கூடாது, சாதி ஒழிய வேண்டும் என்று சொல்வதில் என்ன அடிப்படை இருக்கின்றது.
பணம் இல்லாததால் ஏழைகளை இழிவாகப் பார்க்கின்றார்கள் அதனால் பணத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்ல முடியுமா?சமுதாயத்தில் மரியாதை பெற ஏழைதான் பணத்தை சம்பாதிக்க வேண்டும். அதுபோல் தாழ்ந்த சாதியினரிடம் பணம் இல்லாததால் அவர்களை தாழ்ந்தசமுதாயமாக இந்த சமுதாயம் பார்க்கின்றது.அரசும் இவர்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்று தான் வரையறுக்கின்றது.அரசின் இடஒதுக்கீடை பயன்படுத்தி பொருளாதாரத்திலும், கல்வியிலும் உயர்ந்துவிட்டால் இந்த சமுதாயத்தில் அவர்களுக்கான மதிப்பும் மரியாதையும் தானாக கிடைத்துவிடும். இதற்கு சில சாதிகள் முன்னுதாரணமாக உள்ளன. சாதியின் பெயரை சொல்ல நான் விரும்பவில்லை.
உழைப்பால், கல்வியால்,ஒழுக்கத்தால், செல்வத்தால் சாதி சமத்துவத்தை ஏற்படுத்தாமல் ஒழுக்கக்கேடான காதலால் சமத்துவத்தை ஏற்படுத்த காதலை ஆதரித்தால் சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. மனித உருவில் இருக்கும் மிருகங்கள் அப்பாவி பெண்களை வேட்டையாடி விடுவார்கள்.
திருடனைப் பிடித்து ஏன்டா திருடன என்று கேட்கும் பொழுது பொருளாதார சமன்பாட்டால் பொருளாதார சீர்திருத்தம் செய்தேன் என்று ஒரு திருடன் சொன்னால் இன்று ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு திருடர்கள் அதிகமாகிவிட்டால் திருடன் திருட்டை பொருளாதார சீர்திருத்தம் என்று சொன்னால் இன்று இந்த ஒழுக்கக்கேடான சமுதாயம் திருமணத்திற்கு முன் காதலிப்பதை சீர்திருத்தமாகப் பார்ப்பது போல் வரும் காலத்தில் திருட்டையும் பொருளாதார சீர்திருத்தமாக இந்த சமுதாயம் பார்க்கும்.
ஒவ்வொரு மனிதனும் தனக்கு எது நன்மையோ அதுவே சரி என்று எண்ணுகின்றான் அதன் அடிப்படையிலேயே தனக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடிய கொள்கையை பின்பற்றுகின்றான். தன் உணர்வுக்கு பிடித்த கொள்கையை பின்பற்றிக்கொண்டு அறிவால் ஈர்க்கப்பட்டது போல் பேசுவார்கள், ஆனால் உண்மையில் ஆயிரத்தில் ஒருவர் கூட நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு ஆறாவது அறிவை பெரும் நிலையில் இல்லை. அனைவரும் உணர்வின் தேவைக்கு ஏற்பவே சிந்திப்பதாலும், கொள்கைகளை வகுத்துக் கொள்வதாலும் பெரும்பாலானவர்களால் ஆறாவது அறிவை பெற முடியவில்லை.
கம்யூனிசம் என்ற பொதுவுடமை கொள்கையை ஆதரிப்பவர்கள் பணம் இல்லாத ஏழையாக இருப்பார்கள். பணக்காரர்களிடம் இருக்கும் பணத்தில் தனக்கு பங்கு கிடைக்காதா என்பதே இவர்களின் நோக்கம். இதற்கு முரணாக சில செல்வந்தர்கள் கம்யூனிசத்தை ஆதரிப்பது பேருக்கும்,புகழுக்கும்,பதவிக்காகவும் தலைவர்களாக இருப்பார்களை தவிர தொண்டர்களாக இருக்க மாட்டார்கள்.
சமூக நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள் தன்னுடைய திறமையால் போட்டியிட முடியாதவர்கள் சமூக நீதிக் கொள்கையை ஆதரிப்பார்கள்.
சமூக நீதியை எதிர்ப்பவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் உயர்ந்து விட்டால் தனக்கான வாய்ப்பு பறிபோய்விடும் என்று நினைப்பவர்கள்.
கடவுள் மறுப்பாளர்கள் தன்னை பகுத்தறிவாளி என்று சொல்லிக் கொள்வது இந்த சமுதாயத்தில் தன்னை அறிவாளி என்று சொல்லிக்கொண்டு பலனை அனுபவிப்பதற்காகவே.
ஆன்மீகவாதிகள் தன்னை நேர்மையானவராக காட்டிக் கொள்ளவும், மற்றவர்களை ஏமாற்றவுமே ஆன்மீகத்தை ஆதரிக்கின்றார்கள்.
மதவாதிகள் மற்றும் சாதியவாதிகள் மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல்லாபம் அடையவே சாதியவாதத்தையும், மதவாதத்தையும் ஆதரிக்கின்றார்கள்.
என்னிடம் அறிவை அளக்கும் அளவுகோல் இருப்பதால் அளவுகோளுடன் மனிதர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது ஒரு சிலரைத் தவிர அனைவரும் ஐந்தறிவு மிருகமாக தான் எனக்கு தெரிகின்றார்கள். பாவம் மனிதர்கள் உணர்வில் இருந்து விடுபட்டு சிந்திக்க முடியாமல் துன்பத்திலேயே வாழ்கின்றார்கள்.
என்னுடைய ஆய்வின்படி அறிவால் யாரும் யாரை விடவும் உயர்ந்தவர்கள் அல்ல. ஆனால் தன் உணர்வை கட்டுப்படுத்தி ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்பவர் தான் உயர்ந்தவர்.
ஒழுக்கம் இல்லாதவர்கள் பெரும்பான்மையினர்களாக ஆகிவிட்டதால் அவர்களின் வழிகாட்டலின்படி இந்த சமுதாயம் இருப்பதால், திருமணம் ஆகாத ஒரு பெண் இரவில் ஒரு ஆணுடன் யாரும் இல்லாத இடத்தில் தனிமையில் இருப்பது பெண் சுதந்திரம், பெண்ணுரிமை, காதல் புனிதம் என்று ஒழுக்க கேட்டுக்கு புதிய பெயரை வைத்து அந்த பெண்ணிடம் நஞ்சை விதைத்த ஒழுக்கம் கெட்ட இந்த சமுதாயம் தான்இந்த பாலியல் வன்கொடுமைக்கு காரணம்.
முற்போக்குவாதி, பகுத்தறிவாளி என்று தன்னைத்தானே சொல்லிக் கொடுப்பவர்களை நான் கடுமையாக விமர்சிப்பதற்கு காரணம் அப்போதாவது என்னுடைய கட்டுரைகளை படித்துவிட்டு என்னை விமர்சிக்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பே… பல எழுத்தாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் என்னுடைய ஆய்வு கட்டுரைகளை அனுப்பிவிட்டேன் அவர்களிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.தேள் கொட்டிய திருடனை போல் விமர்சிக்க முடியாமல் மௌனமாக இருக்கின்றார்கள்.என் எழுத்தை விமர்சியுங்கள் அப்போதுதான் மக்களுக்கு எது சரி, எது தவறு என்ற புரிதல் வரும்.
in Social