Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை!

  • All Blogs
  • Social
  • ஆட்சி மாறியும், காட்சி மாறவில்லை!
  • 28 May 2026 by
    Vijayakumaran
    மக்களின் மனநிலை மாறாமல் ஆட்சி மாற்றத்தால் மட்டும் மக்களின் வாழ்க்கைத் தரம் உயராது, பயிர் கடனாக இருந்தாலும் சரி,கல்வி கடனாக இருந்தாலும் சரி, கடன் என்றால் திருப்பி கொடுப்பதுதான் நீதி. மக்களின் வரிப்பணம் தனி மனிதன் வாங்கியிருக்கும் கடனை தள்ளுபடி செய்ய அரசு செலவு செய்கின்றது என்றால் அது வரிகட்டும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம்.

    30 சதவிகித விவசாயிகள் மட்டுமே பயிர் கடன் வாங்கி இருப்பார்கள்,அனைத்து விவசாயிகளும் பயிர் கடன் வாங்குவது இல்லை. நானும் விவசாயி தான் 10 ஏக்கர் விவசாய நிலம் எனக்கு இருக்கின்றது,நான் பயிர் கடன் வாங்கியது இல்லை என்னை போல் பல விவசாயிகள் இருக்கின்றார்கள் அவர்களுக்கு இந்த அரசு என்ன உதவி செய்ய இருக்கின்றது? கடன் வாங்காத விவசாயியும் இந்த மக்களுக்காக தானே உழைக்கின்றார்கள்?

    அரசின் கொள்கை முடிவு அனைத்து விவசாயிகளுக்கும் உதவும்படி இருந்தால் அதில் எந்த தவறும் இல்லை, அதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெறும்.
    விவசாயத்தை ஊக்கப்படுத்த அனைத்து விவசாயிகளுக்கும் மானியம் கொடுப்பதில் எந்த தவறும் இல்லை,ஆனால் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய அரசுக்கு உரிமை இல்லை.

    வாக்குக்கு பணம் கொடுப்பது போல்,வாக்குக்கு அரசின் வரிப்பணத்தை செலவு செய்வது ஜனநாயகத்துக்கும் நீதிக்கும் எதிரானது, எனவே நீதித்துறை தலையிட்டு  பயிர் கடன் தள்ளுபடி அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
    in Social
    # TVK அரசியல் தமிழகஅரசு நிர்வாகம் பொருளாதாரம் மக்கள்நலன் விவசாயம்
    காதல்
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us