பி ஜே பி எதை செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களின் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டால் அது எதிர்க்கட்சிகளின் நலனுக்கே கேடாக முடியும்.
ஒன்றிய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 49.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் மூலமும் பொதுப்பட்டியலில் 50.5% உள்ளது. இந்த நிலையில் பொதுப்பட்டியலில் உள்ள ஏழைகளுக்கு உள் ஒதுக்கீடாக 50.5 சதவிகிதத்தில்10 சதவிகிதம் ஒன்றிய அரசு கொடுத்திருப்பது மக்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு. இதனால் 49.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அனுபவிப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
யார் ஏழை என்பதில் ஒன்றிய அரசின் அளவுகோல் தவறாக இருந்தால் அதற்காக போராட வேண்டியவர்கள் பொதுப் பிரிவில் உள்ள உயர் சாதியினர் தான்.
மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலமும் பொது பிரிவில் 31 சதவிகிதமும் உள்ளது, இந்த நிலையில் பொது பிரிவில் உள்ள ஏழைகளுக்கு 31 சதவீதத்தில் 10 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்தால் ஏழை அல்லாத பொதுப்பிரிவினருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஒன்றிய அரசின் பொது பிரிவு 50.5 %இல் 10% என்பது உள் ஓதுக்கீட்டில் 20% என்பதால் தமிழகத்தை பொறுத்தவரை 31% பொதுப் பிரிவுக்கு 20 சதவீதம் உள் ஒதுக்கீடு அதாவது 10 சதவீதத்துக்கு பதில் 6 சதவீதமாக குறைத்துக்கொள்ள தமிழக அரசு முயற்சித்தால் அது மக்கள் நலன் சார்ந்தது. மேலும் பொது பிரிவு ஏழைகளுக்கு 20 சதவிகிதம் உள்ஒதுக்கீடாக கொடுத்தது போல், அனைத்து பிரிவு ஏழைகளுக்கும் உள் ஒதுக்கீடாக 20% ஒதுக்கீடு செய்தால் தான் ஏழைகளும் இந்த மண்ணில் வாழ முடியும்.
பொதுப்பிரிவில் 20% ஏழைகளுக்கு உள் ஒதுக்கீடாக கொடுத்தது போல், SC,ST,BC,MBC வகுப்பில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் 20 சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று அரசியல் சார்பு இல்லாமல் யார் ஏழைகளின் நலனுக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான மனித நேயம் உள்ளவர்கள்.