Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

  • All Blogs
  • Politics
  • ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
  • 10 January 2026 by
    Vijayakumaran
    கடலூர் மாவட்டம் வடக்குத்து ஊராட்சியில் உள்ள ரெயின்போ நகரில் தார் சாலை அமைப்பதை பார்த்த அனுபவத்தில் இந்த கட்டுரையை எழுதி இருக்கின்றேன். ரெயின்போ நகர் 27 ஆண்டுகள் பழமையான நகர், இந்த நகர் மக்கள் "இலவு காத்த கிளி போல்" இவர் தலைவராகி விட்டால் சாலை போட்டுக் கொடுப்பார், அவர் எம்எல்ஏவாக ஆகிவிட்டால் சாலை அமைத்துக் கொடுப்பார்,என்று நம்பி ஏமார்ந்தது தான் மிச்சம். கடைசியில் திரு சபா.ராஜேந்திரன் எம்எல்ஏ அவர்களின் முயற்சியில் 19 லட்சம் மதிப்பீட்டில் ரெயின்போ நகருக்கு சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, சாலை அமைக்கும் வேலையை எம்எல்ஏ அவர்கள் துவக்கி வைத்தார்.

    நீண்ட நாள் கனவு நிறைவேறிய ஆனந்தத்தில் வேலை செய்யும் சாலை தொழிலாளர்களுக்கு ஒரு வேளை உணவுக்கு என்னுடைய பங்களிப்பாக ஆயிரம் ரூபாயை கொடுத்தேன், எம்எல்ஏ வுக்கும் பொறியாளருக்கும் கையெடுத்துக் கும்பிட்டு என் நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.

    வேலை ஆரம்பித்த பத்து நாட்களில் சாலையை போட்டு முடித்து விட்டார்கள், சாலையின் தரம் மிகவும் மோசம். ஒரு வருடத்தில் பல்லாங்குழி கட்டையைப் போல் குழிகள் உருவாகி சாலை இல்லாமல் இருந்ததே பரவாயில்லை என்ற நிலை உருவாகப் போவது உறுதி.
    காரணம் 15 சென்டிமீட்டர் போட வேண்டிய ப்ளூ மெட்டலை 8 சென்டிமீட்டர் தான் போட்டு உள்ளார்கள், 
    போட்ட 8 சென்டிமீட்டர் ப்ளூ மெட்டலும் கலவை  இல்லாமல் உதிரியாக போட்டுள்ளதாலும், 
    மேலே போட்டுள்ள தார் ஜல்லியை குறைந்த தடிமனில் போட்டுல்லதாலும்,
    உதிரியாக போட்ட ப்ளூ மெட்டலை பக்கவாட்டில் தார் ஜல்லியால் மறைக்காமல் இருப்பதாலும், 
    மழையால் மண்ணரிப்பு ஏற்படாத வகையில் அடர்த்தி அதிகமான கிராவல் போன்ற பொருட்களால் சாலையின் இருபுறமும் பாதுகாப்பு செய்யாமல் சாலைக்கு அருகிலேயே பள்ளம்பட்டி அந்த மண்ணை அணைத்துள்ளதால் ஒரே மழையில் மண் கரைந்து வெட்டிய பள்ளத்துக்கு சென்று விடும்.

    இந்த கொள்ளை ஊழல் ரெயின்போ நகரில் மட்டும் நடக்க வில்லை தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் நடக்கின்றது. அருகில் உள்ள ஸ்ரீராம் நகரில் சாலை அமைத்து 10 நாட்கள் தான் ஆகின்றது, அதற்குள் சாலை முழுவதும் சேதம் அடைந்து விட்டது என்று அந்த நகர மக்கள் சொல்கின்றார்கள். மக்களின் வரிப்பணம் அரசு அதிகாரிகளால் கொள்ளைஅடிக்கப்படுகின்றது. துறை சார்ந்த மந்திரிகள் துரை சார்ந்த கலெக்சன் ஏஜென்ட் ஆக இருக்கின்றார்கள். யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நிலை மாறாது.

    பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்தாலும் பால் கெட்டுப் போகாது, பயன்படுத்திக் கொள்ளலாம், கலந்த தண்ணீர் மட்டுமே நஷ்டம். ஆனால் சாலை அப்படி அல்ல, லஞ்சம் வாங்கிக் கொண்டு தரம் இல்லாத சாலையை போட்டால், சாலை  போட ஒதுக்கிய மக்களின் வரிப்பணம் முழுவதும் ஊழல் பேர்வழிகளால் நஷ்டம் ஆகிவிடும்.எனவே நான் தாழ்மையோடு ஊழல் அதிகாரிகளை கேட்டுக் கொள்வது மொத்த சாலையையும் பாழ் செய்யாமல் பாதி சாலையை மட்டுமாவது டென்டரில் உள்ளபடி தரமாக போட்டுவிட்டு மீதம்முள்ள  சாலையை போட்டு விட்டதாக லஞ்சம் வாங்கிக் கொள்ளுங்கள், தரம் இல்லாத சாலையை இதுவரை யாரும் பார்க்காதது போல் குறைவாக போட்ட சாலையையும் யாரும் பார்க்க மாட்டார்கள்.

    சுதந்திரத்தின் மூலம் நாம் பெற்றிருக்கும் ஜனநாயக வாக்குரிமை என்பது கொடுக்கப்பட்ட தூக்கு தண்டனையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளும் உரிமையை போன்றது தான் நம்முடைய வாக்குரிமை.

    The man is perched precariously on a thick tree branch. Coiled around the same branch, inches from his face, is a large, menacing anaconda looking directly at him. Below the tree on the grassy bank, a fierce lion is standing on its hind legs, looking straight up at the man with an open mouth. To the other side, in a river right next to the tree, a large crocodile is emerged halfway out of the water

    மரத்திலிருந்தால் மலைப்பாம்பு விழுங்கி விடும், தரையில் குதித்தால் சிங்கம் கொன்றுவிடும், தண்ணீரில் குதித்தால் முதலை சாப்பிட்டு விடும், இதில் எதை வேண்டுமானாலும் நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.இப்படித்தான் நாம் தேர்தலில் மாறி, மாறி தேர்வு செய்து துன்பத்தில் வாழ்கின்றோம்.

    மக்களிடம் தர்மம்,நீதி,ஒழுக்கம் அனைத்தும் செத்து விட்டது,மனிதன் மீண்டும் மிருகம் போல் வாழ ஆரம்பித்து விட்டான் அதன் வெளிப்பாடு தான் லஞ்சமும், ஊழலும்.

    நான் நெய்வேலியில் குமார் எலக்ட்ரிக்கல் என்ற கடையை நடத்தி வருவதால் ஆயிரம் ரூபாய்க்கு ஒரு எலக்ட்ரிக்கல் பொருளை 15 ஆண்டுகளுக்கு முன் அன்பளிப்பாக எனக்கு மிகவும் நெருங்கிய நண்பரும் என்எல்சி யின் உயர் அதிகாரியுமான தெய்வத்திரு ரத்தினகுமார் அவர்களுக்கு கொடுத்திருந்தேன், அதை நான் மறந்துவிட்டேன் ஆனால் அவர் அதை மறக்கவில்லை, நான் NLC இல் செய்த பல மின் ஒப்பந்த வேலைகளுக்கு அவர் மேலதிகாரியாக இருந்ததால், நான் அவருடைய நண்பராக இருந்தாலும் அவருடைய மனது அன்பளிப்பாக கொடுத்ததை அன்பளிப்பாக பெற்றுக் கொள்ள ஏற்கவில்லை.15 வருடம் கழித்து அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது, மருத்துவம் பலன் அளிக்கவில்லை, மருத்துவர்கள் குணமடைய வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவர் இறப்பதற்கு 15 நாட்களுக்கு முன் என்னுடைய கடைக்கு சென்று ஆயிரம் ரூபாயை கடையில் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார், நான் அவர் வீட்டுக்கு சென்று நீங்கள் எதுவும் எனக்கு கொடுக்க வேண்டியது இல்லை என்று சொல்லியும் அதை அவர் ஏற்கவில்லை. அவர் சொன்னார் நான் என் பிள்ளைகளுக்கு பாவம் இல்லாமல், கடன் இல்லாமல் பரிசுத்தமாக கடவுளிடம் போய் சேர வேண்டும் என்று நினைக்கின்றேன் அதனால் நீ தப்பாக நினைக்காதே என்று கூறினார். என் கண்ணில் கண்ணீர் கசிந்தது… கண்ணை துடைத்துக்கொண்டு பார்த்தேன் பரிசுத்த ஜோதியை போல் எனக்கு அவர் தெரிந்தார். இந்த உலகில் மிருகம் போல் யார் வேண்டுமானாலும் வாழ்ந்து விட்டு போகலாம் ஆனால் இவரை போல் மனிதனாக ஒரு சிலர்தான் ஒழுக்கத்தோடும், தர்மத்தோடும், நேர்மையாக வாழ்கின்றார்கள்.

    உலகில் உள்ள அனைத்து மதங்களும் மனிதனுக்கு ஒழுக்கத்தையும்,தர்மத்தையும், நேர்மையையும், நீதியையும் கற்பிக்க தான் உருவாக்கப்பட்டன. ஆனால் இன்று அரசியலுக்காக மாதங்கள் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் சிதைந்து விட்டன.

    ஒரு மனிதனுக்கு அழகு அவனுடைய படிப்போ, பதவியோ, செல்வமோ, வீடோ, காரோ, ஆடம்பரமமோ அல்ல. ஒழுக்கமும், நேர்மையும் தான் ஒரு மனிதனுக்கு அழகு என்பதை புரிந்து அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்காமல் நேர்மையாக பணிகளை செய்ய வாழ்த்துக்கள்.

    in Politics
    சீமானின் சேவை நாட்டுக்கு தேவை !!!
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us