இசையும், மொழியும் சமம். இதை புரிந்து கொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசி இருக்கின்றார். இது சரியா ?என்பதை ஆய்வு செய்து இந்த கட்டுரையை நான் எழுதியிருக்கின்றேன்.
வைரமுத்து சொன்னது போல் இசையும், மொழியும் சமம் என்று நினைப்பவன் அனைவரும் ஞானியா! ஞானி என்பதற்கான அளவுகோல் இதுதானா ?அப்படி என்றால் இளையராஜாவை வசை பாடுபவன் அனைவரும் ஞானியா?
அனுபவம் இல்லாத எழுத்தறிவு அறிவை கொடுக்காது என்பதற்கு வைரமுத்துவின் இந்த பேச்சே சான்று. என்னுடைய அனுபவத்தின் படி ஞானி என்பவர் நான் என்ற உணர்வில் இருந்து விடுபட்டு நான் நானல்ல என்ற ஞானநிலையில் அனைத்து உயிரையும் தன் உயிராக நினைப்பவர் தான் ஞானி.
ஞானி என்பதற்கு வைரமுத்துவின் விளக்கம் அறியாமையின் வெளிப்பாடு, வைரமுத்துவின் விளக்கத்தை ஏற்றுக் கொள்வதும் அறியாமையின் வெளிப்பாடு.
யார் ஞானி என்ற அறிவு வைரமுத்துக்கு இல்லை என்றாலும் யார் ஞானி என்று படித்த தகவலையாவது அவர் நினைவில் வைத்திருப்பார் என்ற புரிதலோடு வைரமுத்து அவர்கள் இளையராஜாவை தான் மறைமுகமாக சாடி இருக்கின்றார் என்று எடுத்துக் கொண்டால், மறைமுகமாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தான் சொல்லும் கருத்தின் மீது உறுதித் தன்மை இல்லாதவர்கள், துணிவு இல்லாதவர்கள், நேர்மை இல்லாதவர்கள், ஒழுக்கம் இல்லாதவர்களாக தான் இருக்க முடியும். நான் எழுதிய பாட்டு இளையராஜாவின் இசைக்கு சமம் என்று வெளிப்படையாக பேசலாமே ஏன் மொழியும், இசையும் என்று மொழிக்குள் வைரமுத்து பதுங்கிக் கொள்ள வேண்டும்?
நேர்மை இல்லாதவன் தான் சாதிக்குள்ளும், மதத்திற்குள்ளும், மொழிக்குள்ளும் கோழையைப் போல் பதுங்கிக் கொண்டு எதிரியை தாக்குவான்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடைக்கலம் புகுந்து கொண்ட வைரமுத்து அவர்கள் கலைஞர் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு கொடுத்த இசைஞானி என்ற பட்டத்தை மறுத்து நீ “ஞானி “அல்ல “அஞ்ஞானி “என்று சொல்வது தலைமையை அவமதிக்கும் செயலாக தான் எனக்கு தெரிகின்றது.
வைரமுத்துவை எதிர்த்து பிஜேபி கட்சியினர் போராடிய போது நான் வைரமுத்துக்கு ஆதரவாக எழுதியிருக்கின்றேன், வைரமுத்துவின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் நல்ல பண்பு இல்லாத மனிதர்.
கடவுள் எனும் இயற்கை ஒவ்வொரு அனுவின் அசைவையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றது எதிர்வினைக்காக, நாம் பெற்ற, அனுபவித்த அனைத்தும் முன்னோர்கள் செய்த செயலின் பலனே. எனவே வைரமுத்து தன் செயலுக்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்.