வாழ்வதர்க்காக சாப்பிட்டால் ஆரோக்கியம் சாப்பிடுவதர்காக வாழ்ந்தால் கேடு அதுபோல் உழவை காத்தால் உழவன் வாழ்வான், உழவனை காத்தால் உழவு அழிந்துவிடும். 100 நாள் வேளை திட்டம் மனித சக்தியை பயன் படுத்துவதர்க்காக உருவாக்கிய மேன்மையான திட்டம்,ஆனால் நடைமுறையில் அதர்க்கு எதிர்மறையாக மனித ஆற்றல் வீணாகுவது போல்,நம்முடைய அரசு நீர் ஆதாரத்தை உருவாக்கி உழவை பாதுகாக்காமல், அரசு உழவனுக்கு உதவினால் உழவன் சோம்பேறியாய் ஆகிவிடுவான் உழவும் அழிந்துவிடும்,உழவனும் அழிந்து விடுவான் மக்களும் வருமையில் அழிந்து விடுவர்.எனவே அரசு உழவைத்தான் காக்க வேண்டும், உழவை காத்தால் உழவன் வாழ்வான் இது விதி. உழவு வாழ்ந்தால் தான் இந்த சமுதாயம் செழிப்பாக வாழும். மற்ற தொழிலைவிட உழவுக்கு முக்கியதுவம் கொடுப்போம்.உழவனைபோல், அனைத்து தொழில் புறிபவர்ரையும் சமமாக பார்ப்போம்,அரசு தொழிலில் வேறுபாடு பார்க்கலாம், தொழில்புறிபவரிடம் வேறுபாடு பார்க்ககூடாது.