5 August 2024
by
Vijayakumaran
காதல் உண்மையான காதல் மனிதனிடம் நாகரிகம் உருவாவதற்கு முன்பு வரைதான் இருந்திருக்கும். நாகரிகம் தான் காதலுக்கு எதிரி, நாகரிகம் வளர வளர உண்மைக் காதல் சமுதயதாயத்தில் இருந்து மறைந்துகொண்டு தான் இருக்கும், இதுதான் நாகரிகம். காதல் திருமணம் அதிகரிப்பது நாகரிகத்தின் வளர்ச்சி என்பது தவறான பார்வை, தவறான கருத்து, இது அநாகரிகத்தின் ஆரம்பம். உண்மைக் காதல் என்பது ஒருவர் மீது ஒருவர் வைக்கும் அன்பு. சாதி, மதம், பதவி, செல்வம், கல்வி, அழகு, இது எதையும் பார்க்காமல் கண்டதும் வருவதுதான் உண்மையான காதல்.. இது நாகரிகம், ஒழுக்கம், இல்லாத சமுதாயத்தில் தான் சாத்தியம். சாதி, மதம், பதவி, செல்வம், கல்வி, அழகு, வயது, திருமணம் ஆகாதவர் என்பதைப் பார்த்து நாம் ஒருவரைக் காதலிக்கலாம் என்று நினைப்பது என்பது தீர்மானம். தீர்மானம் என்பது இது சரி, என்று முடிவு செய்த பிறகு அதன் வழி நடப்பது, இது நாகரிகத்தின் வளர்ச்சி. நாகரிகம் என்பது சமுதாயத்தைப் பாதிக்காமல் உறவுமுறையுடன் வாழ்வது. அதாவது ஒருவனுக்கு ஒருத்தி என்ற பகுத்தறிவுடன் கணவன் மனைவி, அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை, மகள், மகன், அண்ணன் மனைவி, தம்பி மனைவி, அக்காள் மகள், என்று இப்படி பல உறவுமுறைகளை வைத்து, இதில் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியான நட்பையும், அன்பையும், பாசத்தையும், வெளிபடுத்துகின்றோம். இது தான் நாகரிகம். உறவு தெரியாமல் உறவு வைத்துக்கொண்டால் அது அநாகரிகம், எனவே கண்டதும் காதல் என்பது எப்படி நாகரிகமனிதனின் பக்குத்தறிவுச் செயலாக இருக்கும். உண்மைக் காதல் என்பதன் பொருள் யாரை வேண்டுமானாலும் காதலிப்பது, இது நாகரிகமா, அநாகரிகமா சிந்தியுங்கள் ! ! ! ஒருவன் ஒரு பெண்ணை தான் காதலிக்கவேண்டும் என்பது காதலின் இலக்கணம் அல்ல. ஒருவன் ஒருத்தியைத்தான் காதலிக்கவேண்டும் என்பது நாகரிக சமுதயத்தின் ஒழுக்கம். இது பகுத்தறிவின் வெளிப்பாடு. நாம் ஒவ்வொருவரும் நாகரிகமாகத் தான் வாழ விரும்புகிறோம். இருப்பினும் நம்மில் சிலர் உணர்வைக் கட்டுக்குள் வைக்காமல், ஒரு பெண்ணையோ, ஒரு ஆணையோ தன் துணையாகத் தானே தேர்ந்தெடுப்பதை காதல் என்று சொல்கிறார்கள். இதன் பெயர் காதல் அல்ல, உறவுகளைப் பொருட்படுத்தாமல் தானே மேற்கொண்ட செயல்தான் இது. இது உண்மைக் காதல் என்றால் அவர் நாகரிகம் இல்லாத கற்கால மனிதர், அல்லது உறவையும், சமுதாயத்தையும் மதிப்பவர் அல்ல என்று தான் பொருள். காதல் உணர்வை கட்டுப்படுத்துவதுதான் நாகரிகம். நாகரிகம் வளரவேண்டும் என்றால், காதல் உணர்வு கட்டுக்குள் இருக்கவேண்டும் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது உண்மைக் காதல் அல்ல ! கட்டுப்பாட்டுக்குள் இருப்பது நாகரிக காதல் தான், நாகரிகக் காதல் என்பது திருமணத்திற்குப் பிறகு கணவன், மனைவிக்குள் ஏற்படும் காதல் தான். அறிவை அறிவால் ஆளுகின்ற ஏழாவது அறிவை இளைஞர், இளைஞிகள் பயன்படுதினாள் திருமணத்திற்கு முன் காதல் செய்யமாட்டார்கள். மிருகமாக இருந்த மனிதனை பகுத்தறிவு மனிதனாக மாற்றியது நாகரிகக் காதல் தான். இனி உண்மைக் காதல் என்று சொல்லி கொண்டு மீண்டும் மிருகமாகக் அலையாமல் உறவுகளையும் சமுதாயத்தையும் மதித்து மனிதனாக வாழவேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு காதல் என்பதை சமுதாயத்தில் ஒழுக்கக் கேடான செயலாகதான் பார்த்தார்கள். கடந்த முப்பது ஆண்டுகளாகப் பொது வாழ்விலும், அரசியலிலும், சினிமாதுறைகளிலும், ஒழுக்கம் இல்லாதவர்கள் ஆதிக்கம் அதிகமாகி விட்டதால், அவர்கள் தன் தவறை மறைக்க முற்போக்குச் சிந்தனை, பகுத்தறிவு என்ற போர்வையில், திருமணத்திற்கு முன் காதல் என்பதை புனிதமாக்கிவிட்டார்கள் இதைப் பயன்படுத்திக் கொண்டு இளைஞர், இளைஞிகள் பலர் காதல் என்று சொல்லிக்கொண்டு காம வெறியுடன் அலைகின்றார்கள். இந்தச் செயலுக்கு இடையூறாக யாரவது இருந்தால், காவல்துறை எங்களைப் பாதுகாக்கவில்லை என்று சொல்லி, காதல் தியாகிகளாகி விடுகின்றார்கள். பாவம் ! இதனால்தான் காவல்துறையினருக்கு. ...... என்று இளைஞர்கள் பெயர் வைத்துள்ளார்களோ? உண்மை காதல், உணர்வை அடிப்படையாகக் கொண்டது, நாகரிகக் காதல் அறிவை அடிப்பட்டையாகக் கொண்டது. காதல் என்பது உணர்வில் ஆரம்பித்து அறிவில் முடியும். ஆம் காதலித்த பிறகுதான் நாம் தப்பு செய்துவிட்டோம், என்று எண்ணி வருந்துவார்கள். நாகரிகக் காதல் என்பது அறிவில் ஆரம்பித்து உணர்வில் முடியும், ஆம் பெரியவர்களால் எது சரி எது பொருத்தமான உறவு, என்று பலமுறை யோசித்தப் பிறகு நடக்கும் திருமணதிற்குப் பிறகு ஏற்ப்படும் காதல், உணர்வில் வாழும். இது தான் சமுதாயத்தில் ஒழுக்கத்தைக் காக்கும். ஒழுக்கமான சமுதாயத்தில் தான் அமைதி இருக்கும்.ஒழுக்கமான சமுதாயத்தில் தான் ஒரு பெண் முழுமையான சுதந்திரத்துடன் வாழமுடியும்.
in Opinion