உனக்கு அறிவு இருக்கா?
-இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா அவர்கள் சில வருடங்களுக்கு முன் பத்திரிக்கை நிருபர் கேட்ட கேள்விக்கு "உனக்கு அறிவு இருக்கா?" என்று கேட்டது ஊடகங்கள் மத்தியில் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியது, இன்றும் இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் அதை மேற்கோள்காட்டி தான் விமர்சிக்கின்றார்கள்.
"உனக்கு அறிவு இருக்கா?" என்று கேட்பது குற்றமா ! என்று ஆய்வு செய்யவே இந்த கட்டுரை.
நான் இளையராஜா சொன்னதை நியாயப்படுத்த இதை எழுதவில்லை, அறிவைப் பற்றி ஆய்வு செய்து “ஏழாவது அறிவு “மற்றும் “புத்தகம் படிப்பதால் அறிவு வளராது “என்ற ஆய்வு புத்தகத்தை நான் எழுதியிருப்பதால் மக்களிடம் அறிவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.
அறிவைப் பற்றிய அறிவு மக்களிடம் இல்லை என்பதற்கு சான்று, அறிவில் சிறந்த அறிவு படிப்பறிவா ?அனுபவ அறிவா ?என்று படித்த சான்றோர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக பட்டிமன்றம் நடத்தியது தான்.
என்னுடைய ஆய்வின்படி அறிவு என்பது அனுபவத்தால் பெரும் அறிவு மட்டுமே. அனுபவம் இல்லாமல் படிப்பதால் அறிவை பெற முடியாது. இந்த கட்டுரையை அறிவாக மாற்றிக் கொள்ளவும் அனுபவம் என்ற அறிவு இருக்க வேண்டும். அறிவு இல்லாமல் எந்த ஒரு தகவலையும் அறிவாக பெற முடியாது.
என்னுடைய ஆய்வின்படி #உனக்கு_அறிவு_இருக்கா என்று கேட்பது உன்னிடம் வாட்ஸ்அப் இருக்கா என்று கேட்பதற்கு சமம். நாம் அனுப்பும் செய்தியை மற்றவரால் பெற முடியுமா என்று நாம் தெரிந்து கொள்ளவே கேட்கின்றோம்.
ஏழு வருடங்களுக்கு முன் என் மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது விடுதிக்கு சென்று இருந்தேன், விடுதியின் சூழல் மகனுக்கு பிடிக்கவில்லை என்று என்னிடம் சொன்னார், சூழலை அனுசரித்திருக்க சொல்லி நான் மகனிடம் உபதேசம் செய்தேன். அதை அவர் மறுத்து இளையராஜா சொன்னதை விட ஒரு படி மேலே சென்று “உங்களுக்கு இதை புரிந்து கொள்ள அறிவு இல்லப்பா “என்று சொன்னார், நான் சிறிது நேரம் யோசித்து விட்டு ஆமாம் என்னால் இதை உணர முடியல, உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை செய் என்றேன். அறிவை பற்றிய புரிதல் எங்கள் இருவருக்கும் இருந்ததால் எங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடிந்தது. இதை அருகில் இருந்து பார்த்த மாணவர்கள் எங்களை வித்தியாசமாகப் பார்த்தார்கள் அதே பார்வையில் தான் இன்று அறிவை பற்றிய அறிவு இல்லாத இந்த சமுதாயம் இளையராஜாவை பார்க்கின்றது.
#உனக்கு_அறிவு_இருக்கா என்ற இளையராஜாவின் கேள்வி பிரபலமானதால் அதைத் தொடர்ந்து அறிவை பற்றிய அறிவை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று ஊடகத்துறையினர் விரும்பினால் அறிவைப் பற்றிய என்னுடைய முழு ஆய்வையும் பகிர்ந்து கொள்வேன். அறிவை பற்றிய என்னுடைய ஆய்வு உலக நீதியை மாற்றக்கூடிய வல்லமை பெற்றதால், இந்த அறிவை முதலில் புரிந்து கொண்டு மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகம் நிச்சயம் சரித்திரத்தில் இடம் பெறும்.