தேவைப்படும் பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக்கொண்டு தேவைப்படாத பொருட்களை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி விட்டால் வீடு சுத்தமாக இருப்பது போல், நாம் ரகசியம் என்று ஒரு சிலதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்ற அனைத்தையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் ! மனசு தூய்மையாக இருக்கும். இருந்தது 40 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்கள் இடம். இப்போது வாழ்கின்ற இளைஞர்கள் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றார்கள், எல்லாவற்றையும் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்று. ஏன் என்று கேட்டால் அனைவரும் அப்படித்தான் இருக்கின்றார்கள் அதனால் நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று.இதை மற்றவர்களிடம் பரிசோதித்தால் அப்போதுதான் உண்மை தெரிகின்றது யாரும், எதையும், எவரிடமும், பகிர்ந்து கொள்வதே இல்லை என்பது. எதை எவரிடம் கேட்டாலும் தெரியாது என்பார்கள் அல்லது பதில் சொல்லாமல் தவிர்ப்பார்கள், பெரும்பாலானவர்கள் இதை வாழ்க்கையில் திறமை என்று எண்ணுவதால் நண்பர்களுக்கு இடையேவும்,உறவினர்களுக்கு இடையேவும் நம்பிக்கை தன்மை குறைந்துவிட்டது.ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை குறைந்து விட்டதால் உறவுகள் இருந்தும் அனைவரும் அனாதையாக மாறிவிட்டார்கள் நவீன காலத்தில்.
வெளிப்படைத் தன்மையே நேர்மைக்கு சான்று!
காலையில் என்ன சாப்பிட்டீங்க என்று கேட்டாலும் அதை சொல்லவே தயங்கும் இந்த காலத்தில் அனைத்தையும் ரகசியம் என்று எண்ணி குப்பை மேட்டுக்குல் தன்னை புதைத்து கொள்ளாமல், தேவையில்லாத ரகசியங்களை வெளியில் கொட்டி விட்டால் நம் மனது தூய்மையாகி விடும் !
அனைவரிடமும் வெளிப்படையாக பேசுவோம் !
நம்பிக்கையைப் பெறுவோம் !!
நட்பையும், உறவையும் காப்போம்!!!