பிறப்பிலும், வளர்ப்பிலும், வாழ்விலும், நான் மற்றவர்களிடமிருந்து தனித்துவம் பெற்றவன் என்று எவன் ஒருவன் புரிந்து கொள்கிறானோ அவன் யாருடனும் போட்டி போட மாட்டான்.
போராட்டம் நம் தேவைகளை பெற்றுக் கொடுக்கும்!
போட்டி நம் நிம்மதியை கெடுக்கும் !போட்டியும், பொறாமையும், ஆறாவது அறிவால் மனிதன் பெற்ற சாபம்.
சாலையில் சம்மந்தமே இல்லாதவர்களுடன் போட்டி போட்டு விபத்தை ஏற்படுத்துவதுபோல், வாழ்க்கையில் சம்பந்தமில்லாமல் பலருடன் போட்டிபோட்டு பலர் வாழ்க்கையை போட்டியில் தொலைத்துவிடுகிறார்கள்.
போராடுவோம் !
வெற்றி பெறுவோம்!
போட்டியை தவிர்ப்போம்!