பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது நாகரீக வளர்ச்சியா!
ஒருவர் காலில் விழுவதின் மூலம் உடல்மொழி வெளிப்படுத்துவது “நான் உன்னை விட சிறியவன் என்பதே “
நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்ற மனநிலை உணர்வின் வெளிப்பாடு. ஒருவர் நமக்கு அடிமையாக இருப்பதன் மூலம் நாம்பெரும் மகிழ்ச்சி உணர்வின் வெளிப்பாடு,
உணர்வால் மனிதனும், மிருகமும் ஒன்றுதான். மனிதன் அறிவால் உணர்வை ஆளுமை செய்வதால் தான் ! மிருகத்தைவிட அறிவால் உயர்ந்து நிற்கின்றான். உணர்வை அறிவால் ஆளுமை செய்ய முடியாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மிருகத்திற்கு சமமானவர்கள். அறிவால் அனைவரும் சமம் என்ற ஞான நிலையை அடைந்த யாரும் மற்றவர்களை அடிமைப்படுத்தி அதன் மூலம் மகிழ்ச்சி அடைய மாட்டார்கள்.
உன்னை விட நான் தாழ்ந்தவன் என்று காலில் விழுந்தவருக்கு, உடல் மொழியால் வெளிப்படுத்துவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்து அதன் மூலம் ஒருவர் ஆசீர்வாதம் செய்து, ஒருவேளை ஆசீர்வதித்தவருக்கு சக்தி இருந்தால் ஆசிர்வாதம் பெற்றவர் ஆசீர்வாதம் செய்தவரை விட ஒருபோதும் உயரவே முடியாது. காரணம், ஆசீர்வாதம் பெற்றவர் தனக்கு அடிமையாகவே இருக்க வேண்டும் என்று ஆசீர்வதிப்பவர் விரும்புவதால். எனவே பெற்றோர்கள் தன் பிள்ளைகளை காலில் விழ வைத்து அந்த மகிழ்ச்சியில் ஆசீர்வாதம் செய்யாதீர்கள்.
என்னைவிட என் பிள்ளை உயர வேண்டும் என்ற மனநிலையில் வாழ்த்துவது தான் உண்மையான ஆசீர்வாதம்.
காரியம் சாதிக்க காலில் விழுவது என்பது அவரவர் விருப்பம்.