நீதி உலகெங்கும் ஒன்றல்ல, இந்தியாவின் நீதி, அரபுநாடுகளில் அநீதி, இந்தியாவில் திருமணத்திற்கு முன் காதலிப்பது என்பது புனிதமானது. அரபு நாடுகளில் இதற்கு தூக்குத் தண்டனை என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்தியாவில் காதலித்தவனுக்கு அரபு நாட்டில் தூக்கு தண்டனை கொடுப்பது உலக நீதி அல்ல.
திரை உலகம், பாலியல் ஒழுக்கத்தில் அது ஒரு தனி உலகம்.
திரை உலகத்தின் பாலியல் நீதி என்பது, நிஜ உலகத்தின் நீதிக்கு முற்றிலும் முரணானது.
திரை உலகத்தில் ஆண்-பெண் வேற்றுமையே இல்லை, எனவே அங்கு பாலியல் துன்புறுத்தலும் இல்லை. பெண்கள் செல்வாக்கு உள்ளவர்களின் உதவியைப் பெற மாதம் ஒருவருடன் குடும்பம் நடத்துவதும் தவறில்லை. ஆணும் பெண்ணும் பாலியல் ரீதியான தன்னுடைய விருப்பத்தை மற்றவர்களிடம் தெரிவிப்பது என்பது மிகவும் கண்ணியமான செயல் அங்கு. அங்கு ராமர் சென்றாலும் இராவணனாக, அங்குள்ள பெண்கள் அவர்களின் சுயநலத்திற்காக மாற்றி விடுவார்கள் என்பதுதான் எதார்த்தமான உண்மை.
திரை உலகில் தினம்,தினம், நடக்கும் இயல்பான ஒரு செயலைப் பற்றி நிஜ உலகத்திற்கு வந்து ஒரு பெண் நீதி கேட்பது உலகநீதி அல்ல. இது ஒரு கீழ்த்தரமான அரசியல்.
திரை உலகத்தின் நீதி, நிஜ உலகத்தில் அநீதி என்பதால், இங்கு இருவருமே ஒழுக்கம் கெட்டவர்கள் தான் இந்த ஒழுக்கமில்லாத திரையுலகில் இருந்து மீண்டும் ஒருவர் முதல்வராகி இந்த நாட்டை வழி நடத்த கூடாது, கெடுக்கக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்த பதிவு.