பிள்ளைகளை பதட்டப்படுத்தாதீர்கள் மாறாக அவர்களை உற்சாகப்படுத்துங்கள், தோல்வியை எதிர்கொள்ள தயார் படுத்துங்கள், தோல்வி அடைந்தவன் வாழ முடியாது என்றால் இந்த உலகில் யாரும் உயிராக இருக்க முடியாது. நரியின் கதை படி கைக்கு எட்டாத பழம் “சீ சீ இந்தப் பழம் புளிக்கும் “என்பதை போல் நமக்குக் கிடைக்காதது அனைத்தும் நமக்கு தேவைப்படாதது என்ற சிந்தனையே வாழ்நாள் முழுவதும் ஆனந்தத்தைக் கொடுக்கும். தோல்வியை எதிர்கொள்வது தான் வாழ்க்கையின் வெற்றிக்கு வழி என்பதை உணர்ந்து பிள்ளைகளுக்கு துணையாக இருங்கள், உங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள பிள்ளைகள் மீது சவாரி செய்யாதீர்கள்.