16 November 2017
by
Vijayakumaran
முற்போக்கு சிந்தனை, முற்போக்கு எழுத்து என்றால் என்ன என்று பல நாட்களாக ஆராய்ந்தேன் தற்போதுதான் அதற்கான சரியான விடை கிடைத்தது. சுய வாழ்வில் ஒழுக்கம் இல்லாதவர்கள் ஓர் அணியில் சேர்ந்து ஒருவனுக்கு ஒருத்தி,கற்பின் சிறப்பை, குடும்ப உறவு முறையை சமுதாயத்தில் சீர்குலைப்பது தான் முற்போக்கு சிந்தனை யாளர்களின் முதல் பணி.
ஒழுக்கமான சமுதாயத்தில் ஒழுக்கம் இல்லாதவர்களுக்கு முக்கியத்துவம் பெற்று கொடுப்பதுதான் முற்போக்குச் சிந்தனை.
தெளிவாக சொல்லவேண்டும் என்றால் நம்வீட்டு தக்காளி கூடையில் ஒருதக்காளி அழுகிவிட்டாள் அப்புறப்படுத்திவிட்டு மீதம்முள்ள தக்காளி கெட்டுபோகாமல் பார்த்துக் கொள்வது தான் நடைமுறை.ஆனால் முற்போக்குச் சிந்தனை என்பது அழுகிய தக்காளியை அனைத்து தக்காளிக்கும் நடுவில் வைத்து நல்ல தக்காளியையும் அழுக வைப்பது ஆகும்.
சமுதாயத்தை பற்றி கவலைப்படாமல் பாதிக்கப்பட்ட அல்லது கெட்டுபோன தனி மனிதனின் உணர்வை மையமாக வைத்து எழுதுவது தான் முற்போக்கு எழுத்து.
உறவினர் வீட்டில்ச கூட ஒரு பெண்ணின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை,காரணம் முற்போக்குவாதிகளாள் உறவுமுறைகள் சிதைந்து விட்டது. ஒழுக்கம் இல்லாத உறவை சமுதாயம் சரி என்று ஏற்றுக் கொள்ளக் கூடிய சூழலை உருவாக்கியது முற்போக்கு எழுத்துக்களும், திரைப்படமுமே.
கண்ணகியின் கதையை படமாக எடுத்தால் கற்பின் வலிமையை உணர்ந்த ஒழுக்கமான சமுதாயம் உருவாகும். மாதவியின் கதையை எடுத்தால் ஒழுக்கம் இல்லாத சமுதாயம்தான் உருவாகும்.
நான் அதிகம் திரைப்படத்தைப் பார்ப்பது இல்லை சிறு வயதில் முதல் மரியாதையும் கடைசியாக அழகியையும் பார்த்தேன் இரண்டு படமும் முற்போக்கான படங்கள்தான்,இந்த இரண்டு படமும் மக்களுக்கு சொன்ன செய்தி திருமணத்திற்கு முன் காதலிப்பதும், 60 வயதான திருமணமான ஆண் சிறு வயது பெண்ணை காதலிப்பதும் தவறில்லை என்றும்.பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் காதல் செய்வதும், திருமணம் ஆன ஆண் மீண்டும் திருமணம் ஆன பழைய காதலியை காதலிப்பது தவறு இல்லை என்பதே ஆகும்.
திரைப்படம் ஒரு கலைதான், ஆனால் திரைப்படம் என்பது உயிருள்ள ஓவியம். பாம்பை வரைந்தால் அது உண்மையான பாம்பாகவே மாறும் வலிமை திரை ஓவியத்துக்கு உண்டு. திரை துறையினர் கலை என்று நினைத்து உருவாக்கிய பல கதாபாத்திரங்கள் உயிர்பெற்றெழுந்து சமுதாயத்தின் ஒழுக்கத்தை கெடுத்து விட்டன..
சுற்றுச்சூழலே ஒரு மனிதனின் செயலை தீர்மானிக்கின்றது அந்த அடிப்படையில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை மதிக்கின்ற சமுதாயத்தில் தான் கணவன், மனைவியும் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய கட்டாயமும், நிர்பந்தமும் ஏற்படும் அப்போது அவர்களுக்குல் அன்பு மலர்கின்றது. அந்த அன்புதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றது.
திருமணத்துக்கு முன் காதலிப்பவரையும், மறுமணம் செய்து கொண்டு வாழ்பவர்களையும் இந்த சமூகம் இரண்டாம் தரமாகவும், மற்ற ஒழுக்க கேட்டில் ஈடுபடுபவர்களை மூன்றாம் தரமாகவும் பார்பது தொடர்ந்தால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் நிலைத்து நிற்கும். முற்போக்குச் சிந்தனை என்று சொல்லி மறுமணத்தை சமுதாயம் முதல்தரமான அங்கீகரித்தால் பெரும்பாலானவர்கள் ஆறுமாதத்திற்கு ஒரு திருமணம் செய்ய காரணத்தை தேடுவார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த சமுதாயம் மறுவாழ்வு கொடுப்பது தவறில்லை. இலை மறைவில் காய் மறைவாக இருக்க வேண்டிய ஒழுக்கக்கேட்டை பொதுதளத்தில் திரைபடமூலமும், எழுத்தாலும் இதுதான் சரியான வாழ்க்கை என்ற சமுதாயத்தை நம்பவைப்பது தவறு.
ஒரு திருமணம் ஆன பெண்ணின் கள்ளக் காதலையும் இந்த சமுதாயம் பெண்ணின் உரிமையாக ஏற்றுக்கொள்ள வைத்ததுதான் முற்போக்குவாதிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அதற்கான ஆதாரம் லட்சுமி என்ற ஒழுக்ககேடான குறும்படத்திற்கு கிடைத்த விருதுகளே சான்று.
பக்கத்து வீட்டில் ஒழுக்கமானவன் வாழ்ந்தால் தான் நமக்கு பாதுகாப்பு என்பதை உணர்ந்து நம் சமுதாயத்தை ஒழுக்கமான சமுதாயமாக மாற்ற அழுகிய தக்காளியை கூடையில் இருந்து தூக்கி எறிவதுபோல் ஒழுக்கம் இல்லாதவர்களின் கருத்துக்களை தூக்கி எறிவோம்! ஒழுக்கம் இல்லாத வரை பொது வாழ்வில் இருந்து தூக்கி எறிவோம்! பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம்.!
ஒருவரின் ஒழுக்கத்திற்கும், ஒழுக்கம் இன்மைக்கும் விதியே காரணம். விதியின் பலனாக இன்று ஒழுக்கமானவர் நாளையே ஒழுக்கம் கெட்டு விட்டார்என்றால் தானாகவே பொதுவாழ்வில் இருந்து விலகும் பன்பை அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும் பெறவேண்டும். தனிமனிதனின் உணர்வைவிட சமுதாயத்தின் பாதுகாப்பே முக்கியம்.
in Opinion