நோயாளியின் நோய்க்கு தேவையான மருந்தும் பரிசோதனையும் எழுதாமல் தனக்கு எதில் லாபம் அதிகமோ அதை எழுதும் மருத்துவர் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த செய்தி நல்லதோ அதை சொல்லாமல் ஊடகத்திற்கு எந்த செய்தி லாபத்தை கொடுக்கின்றதோ அதை சொல்லும் ஊடகங்கள் இருக்கும் வரை! மக்களுக்கு எந்த திட்டம் நல்லதோ அதை கொண்டுவராமல், அரசியல் தலைவருக்கு பயன் தரக்கூடிய திட்டத்தையும்,இலவச திட்டத்தையும் கொண்டுவரும் அரசியல் தலைவர் இருக்கும் வரை! யார் சிறந்த தலைவர் என்று பார்க்காமல் யார் பணம் கொடுக்கின்றார்கள் என்று பார்த்து ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை! நம் மக்கள் முன்னேறவே முடியாது!