காதல் புனிதமானதா ?
இதயம் கண்களால் பேசினால் காதல் !
உணர்வு வார்த்தைகளால் பேசினால் காமம் !
ஒரு முறை மட்டுமே வந்தால் காதல்!
பலமுறை வந்தால் அது காமம்!
இரண்டு இதயங்கள் பேசிக் கொள்வது என்பது புனிதமானது, தெய்வீகமானது,
இரண்டு இதயங்களின் தகவல் பரிமாற்றம் என்பது இரண்டு ஆத்மாக்கள் கலப்பதாகும், இந்த நிகழ்வுகள் காற்றாலும், நிலவாலும், இயற்கையாலும் மட்டுமே நடைபெறுகின்றது, அதனால்தான் சங்க இலக்கியங்களில் காதலுக்கு காற்றையும், நிலவையும், தூது விட்டார்கள்.இந்த நிலை ஆழ்ந்த தியானத்திற்கு சமமானது.
இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள பரிசுத்தமான இதயங்கள் இங்கு இல்லை இருப்பினும் என் கடமையை செய்கிறேன்.
அன்று காதலித்தவர்கள் கடல் தாண்டி காதலிக்கவில்லை, காற்றையும், நிலவையும் தூது விட. வாகன வசதி இல்லாத காலம் ஊருக்குள்ளேயே தான் காதலித்து இருக்க வேண்டும். இந்த நிலையில் இப்போது உள்ளது போல் பேசிக் கொள்ளலாமே, ஏன் அதைச் செய்யவில்லை ?
அதற்குப் பெயர்தான் காதல். இது போன்ற காதல் அன்றும், இன்றும், லட்சத்தில் ஒன்றுதான்.
இவர்களை வாழ வைக்க சட்டம் தேவையில்லை தூதுசென்ற இயற்கையே இவர்களை சேர்த்து வைக்கும்.
இந்தக் காதல் வார்த்தைகளாலும், கைகளாலும் பேசிக் கொண்டால் அது காமம். இந்த காம நிலைக்கு செல்வதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது தான் நாகரிகம், ஒழுக்கம், கலாச்சாரம்.
இன்றைய காதலின் பொருள் என்ன ?சிந்திக்கவேண்டும் !நம் கலாச்சாரத்தை மதிக்காமல் காதல் என்ற போர்வையில் காமத்தை வெளிப்படுத்தினால் அது விபச்சாரத்திற்கு சமமான குற்றம். எனவே காதல் என்ற பெயரில் காமத்தை வெளிப்படுத்தினால் குற்றம் என்ற சட்டம் வந்தால் தரமான திரைப்படமும் வரும், பொது இடங்களுக்கு முகம் சுளிக்காமல் அக்கா தங்கையுடன் செல்லவும் முடியும். அப்போதுதான் பொது இடங்களில் முழுமையான பாதுகாப்பு பெண்களுக்கு கிடைக்கும்.
இவற்றை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல பெரும்பாலான அரசியல் தலைவர்களுக்கும், முக்கிய பிரமுகர்களுக்கும், திரைத்துறையினர் களுக்கும், தகுதி இல்லாததால் சொல்ல தயங்குகிறார்கள். எனவே அவர்களைப் போலவே மக்களையும் ஒழுக்கம் இல்லாதவர்களாக உருவாக்குகின்றார்கள்.