திரைப்பட பாடலை பொருத்தவரையில், மரத்தில் ஒட்டுண்ணியாக வளரும் செடியை போல் இசையோடு வரும் வார்த்தைகளும் இசையின் ஆதாரத்தில் தான் இருக்க முடியும். எந்த மொழியாக இருந்தாலும் மெட்டில்லாத வார்த்தைகள் ஒருபோதும் பாடலாக அமையாது,பாடல் என்றால் அது இசையை மட்டுமே குறிக்கும்.
மெட்டோடு வார்த்தைகளை ஒட்டியது போல் இளையராஜா என்ற இசை மேதையிடம் ஒட்டிக்கொண்டு ஒட்டுண்ணியை போல் வாழ்ந்த வைரமுத்து அவர்கள் இளையராஜாவை நீ ஞானி அல்ல அஞ்ஞானி என்று சொல்வது அவருடைய சுயரூபத்தை காட்டி விட்டது.
வைரமுத்து அவர்களை ஒழுக்கம் கெட்டவராக தான் நான் நினைத்திருந்தேன், தற்பொழுது தெரிந்து விட்டது அவர் நன்றியும் கெட்டவர் என்று.
காலத்திற்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப ஒரு பாடல் மொழி இல்லாமலும் இயங்க முடியும், இசை இல்லாமலும் இயங்க முடியும், ராகம் இல்லாமலும் இயங்க முடியும், மூன்றும் தனித்தனி உலகம், ரசிகனின் ரசனைக்கு ஏற்ப இசையோ, மொழியோ, ராகமோ ஏதோ ஒன்று பெரிதாக தெரியலாம்,இதில் எது பெரியது என்று ஆராய்வது அறியாமை,அது இங்கே பேசு பொருளும் அல்ல.
இளையராஜா அவர்கள் இசையமைத்த திரைப்பட பாடல்களில் இளையராஜாவின் பங்களிப்பு அதிகமா, பாடல்கள் எழுதிய பாடல் ஆசிரியர்களின் பங்களிப்பு அதிகமா என்பதுதான் இங்கு விவாத பொருள்.
இதற்கு விடையை மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம் யார் யாரை தேர்வு செய்தார்கள் என்பதை வைத்து. பாடல் ஆசிரியர் இசையமைப்பாளரை தேர்வு செய்தாரா, அல்லது இசையமைப்பாளர் பாடல் ஆசிரியரை தேர்வு செய்தாரா, அல்லது பாடல் பாடியவர் இசையமைப்பாளரை தேர்வு செய்தாரா, அல்லது இசையமைப்பாளர் பாடல் பாடுயவரை தேர்வு செய்தாரா என்பதை தெரிந்து கொண்டால் பாடலை உருவாக்கியவர் யார் என்பது தெரிந்துவிடும்.
ஒரு பெரிய கட்டிடத்தை உருவாக்க கட்டட வடிவமைப்பாளர் (architect) என்பவர் எப்படி தேவை படுத்துகின்றாரோ அதுபோல்தான் ஒரு திரைப்பட பாடலை உருவாக்க இசையமைப்பாளரும் தேவைப்படுகின்றார்.
சிறு சிறு கட்டிடங்களை கட்டுவதற்கு architect தேவைப்படாதது போல், கிராமபுற பாடல்களை பாடுவதற்கும், கூத்து பாட்டை பாடுவதற்கும் இசையமைப்பாளர் தேவைப்படாமல் இருக்கலாம், அதற்காக ஒரு திரைப்பட பாடலுக்கு இசையமைப்பாளரின் பங்கும், பாடல் ஆசிரியரின் பங்கும் சமம் என்று சொல்வது, ஒரு கட்டிடத்தை உருவாக்க architect பங்களிப்பும், கொத்தனாரின் பங்களிப்பும் சமம் என்று சொல்வதற்கு சமம்.