#இசைஞானி #இளையராஜா
இளையராஜா அவர்களின் அணுகுமுறை தவறானதா? அல்லது இளையராஜாவை விமர்சனம் செய்பவர்கள் தவறாக விமர்சிக்கின்றார்களா ?அதாவது பொருளின் தரத்தில் குறை இருக்கா அல்லது தரத்தை உறுதி செய்யும் அளவுகோலில் தவறு இருக்கா என்பதை இந்த ஆய்வில் பார்ப்போம்.
அறிவைப் பற்றிய என்னுடைய ஆய்வின்படி நம்முடைய ஐந்து புலன்களால் மட்டுமே அறிவை பெற முடியும். நாம் ஒரு பொருளை நுட்பமாக பார்க்கும் பொழுது நம்முடைய பார்வையின் பரப்பளவு குறைந்துவிடும், நாம் விரிந்து பார்க்கும் பொழுது நுட்பம் குறைந்துவிடும் என்பது புலன்களின் இயல்பு.
துறை சார்ந்த சாதனையாளர்கள் தன்னுடைய ஐந்து புலன்களையும் ஒரு புள்ளியில் நிலை நிறுத்துவதாலேயே அவர்கள் அந்த துறையில் தலை சிறந்து விளங்க முடிகின்றது, அப்படிப்பட்ட சாதனையாளர்களின் பார்வை அகன்று, விரிந்து இல்லை என்று நினைப்பது யார் தவறு.
இந்த சமுதாயத்தில் ஒரு மனிதன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அளவீடு இருப்பது போல் ஒரு கிலோ நீரை லிட்டரில் அளந்தால் ஒரு லிட்டர் இருக்க வேண்டும் என்பது அடிப்படை, ஆனால் ஒரு கிலோ கடலை எண்ணெயை லிட்டரில் அளந்தால் குறைவாக தான் இருக்கும். குறைவாக இருப்பதால் பொருளின் அளவில் தவறு என்று புரிந்து கொண்டால் அது யாருடைய தவறு ?
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இசையின் மீது எந்த அளவுக்கு நுட்பமான பார்வை இருக்கின்றது, ஈடுபாடு இருக்கின்றது என்பதற்கான ஆதாரம்தான் அவருடைய அணுகுமுறை என்பதை நாம் புரிந்து கொண்டால் அவருடைய ஒவ்வொரு செயலையும் நம்மால் ரசிக்க முடியும்.