100 ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு மனிதனுக்குள் தோன்றிய சிந்தனைதான் ஆணும் பெண்ணும் சமம் என்ற சித்தார்த்தம், அவர் யார் என்று நமக்குத் தெரியாது ஆனால் அவர் செய்த புண்ணியத்தால்தான் நம் பெண்பிள்ளைகள் அனைத்து உரிமையும் பெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்கள். வலுவான ஆளுமைத் திறன் படைத்த ஆணுக்கு சமமானவர் பெண் என்பதை எந்த ஒரு ஆணும் ஆரம்பத்தில் ஏற்கவில்லை. பல ஆண்டுகள் கடந்த பிறகு தான் ஒரு சிலருக்கு புரிந்தது ஆணும் பெண்ணும் சமம் என்று சொன்னது உடலைப் குறிக்கவில்லை உயிரை குறித்தது என்று, அதன்பிறகு ஆண்கள் அனைவரும் பெண் விடுதலைக்கு ஆதரவு கொடுத்தார்கள் அதுபோல் இன்று அறிவால் அனைவரும் சமம் என்பதன் பொருள் யாரைவிடவும் யாரும் அறிவால் உயர்ந்தவரல்ல என்பதாகும் எனவே அறிவால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க வேண்டும்என்பதுதான் புதிய சித்தார்த்தம்.ஆணின் ஊதியத்தை பெண்ணுக்கும் சமமாக கொடுக்கும்போது, அதிகாரிக்கு இணையாக தொழிலாளிக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறுவது சரியே.