ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றம் தீர்ப்பு சரியா?
3 October 2018by
Vijayakumaran
கடவுள் இல்லை !ஆனால் கடவுளை வணங்கினால் நன்மைகள் உண்டு என்ற முரண்பட்ட அறிவியல் உண்மையை ஆய்வு செய்து 10 ஆண்டுகளுக்கு முன்பே “உன் செயலுக்கு நீ காரணம் அல்ல “ என்ற புத்தகத்தில் நான் எழுதி இருக்கின்றேன்.
கடவுள் இல்லை என்று என்னுடைய ஆய்வு உறுதி செய்த போதிலும், கடவுள் இல்லை என்பதை நான் முழுமையாக ஏற்றுக் கொண்ட போதிலும், கடவுளை நான் தினமும் வணங்கிக் கொண்டு தான் உள்ளேன். காரணம், என்னை நான் ஒழுங்குபடுத்தி கொள்ளவே. வேற்று மத வழிபாட்டு தளங்களை நான் கடந்து செல்லும் போதும், மனதுக்குள் வணங்கிவிட்டு தான் செல்வேன். காரணம், அது புனிதமான இடம் என்பதால் மட்டுமே.
புனிதம் என்பது சுத்தம் தூய்மையின் அடையாளம் மட்டும் அல்ல. அது கட்டுப்பாடு, ஒழுக்கத்தின், அடையாளமும் கூட. கட்டுப்பாடும், ஒழுக்கமும், இல்லாத இடம் புனிதம் பெறாது.
நீதித்துறையின் தீர்ப்பு கோவிலின் புனிதத்தையும், ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும், கெடுக்கும் செயல் மட்டும் அல்ல, அது காலம், காலமாக விரதமிருந்து வழிபட்டு வரும் பக்தர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் செயலாகவும் உள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பெண்களுக்கான உரிமையை மீட்டுக் கொடுத்து உள்ளது என்று சிலர் கூறுவது தவறு. காரணம் 10 வயதுக்கு உட்பட்ட, 50 வயதுக்கு மேற்பட்ட, பெண்கள் தற்போதும் கோயிலுக்கு சென்று வர அனுமதிக்கப்படுகிறார்கள்.
கடவுள் இல்லை என்று என்னால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியும். அதை அடிப்படையாக வைத்து அனைத்து மத வழிபாட்டுமுறைகளும் தேவையற்றது என்ற அறிவுபூர்வமான திர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுக்க துணிவு இருக்கா?
புனிதம் கெடாமல் கட்டுப்பாட்டிலும், ஒழுக்கத்திலும், தூய்மையிலும், காலத்திற்கு ஏற்ப மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய உரிமை தேவஸ்தானத்திற்கும், பக்தர்களுக்கும், மட்டுமே உள்ளது என்பதை அரசும், நீதித்துறையும், புரிந்து செயல்பட வேண்டும்.