ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி? Part 2
24 August 2025by
Vijayakumaran
“ஐந்தறிவு மனிதர்களையும், ஆறறிவு மனிதர்களையும் கண்டறிவது எப்படி “என்ற கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு பதிவு செய்து இருந்தேன், இதை படித்த நண்பர் போஸ்கோ அவர்கள் சரியா என்ற கலை இலக்கிய ஆய்வு மையத்தை வடலூரில் நடத்தி வருகின்றார், புத்தகங்களை படிப்பதும் சமுதாய சிந்தனையும் தான் இவரின் முழு நேர பணி. அவர் அவருடைய கருத்தை பதிவு செய்து இருந்தார், இதில் அவர் எழுதி இருந்தது, தங்கள் எழுத்து அவப்பொழுது எதையோ தொட்டுவிட்டு சென்று விடுகின்றது அந்த நேரம் நம் சிந்தனை அதை நோக்கி சில நிமிடங்கள் பயணித்தாலும் கூட பிறகு வழக்கமான பாதையிலேயே சென்றுவிடுகின்றது என்றும், உங்கள் கருத்து தேடல் யாரையாவது சென்று பாதித்திருக்கிறதா ?,
உண்மையாக உணர்ந்தவர்கள், பயனடைந்தவர்கள் உங்களிடம் அதை பகிர்ந்து கொண்டிருக்கின்றார்களா?என்ற கேள்வியை முன் வைத்தார்.
அவர் கேட்டது சரிதான், ஒரு மருந்து சிறந்த மருந்து என்றால் அது எத்தனை பேரை குணப்படுத்தியது என்ற கேள்வி அறிவுபூர்வமான கேள்விதான். என்னுடைய கருத்துக்களால் பயனடைந்தவர்களை சொன்னால் தற்பெருமையாக இருக்கும், எனவே அனைத்து கோட்டையும் அழித்துவிட்டு புதிதாகவே பரிசோதித்து விடுவது தான் சிறப்பாக இருக்கும்.
நோயாளிக்கு மருந்தை கொடுத்தால்தான் மருந்து வேலை செய்கிறதா என்பது தெரியும், அது போல் நான் பெற்ற அறிவு துன்பத்தை போக்குதா, இல்லையா என்பது பிரச்சனை உள்ளவர்களுக்கு கொடுத்து சோதித்தால் தான் தெரிய வரும்.
போதை பழக்கத்தில் இருந்து விடுபட வேண்டும் என்று விரும்புவர்களிடம் நான் பெற்ற அறிவை கொடுத்து சோதிக்கலாம், பிரிந்து வாழும் கணவன் மனைவி, அண்ணன் தம்பி, அப்பா மகன் இவர்களிடமும் இதை சோதிக்கலாம், தோல்வியில் துவண்டு இருப்பவர்கள் இடமும் இதை சோதிக்கலாம், குறிப்பாக நாடறிந்த ராமதாஸ், அன்புமணி பிரிவில் சோதிக்கலாம்.
என்னிடம் சில மணி நேரம் பேசினாலே போதும் பிரிந்தவர்கள் சேர்ந்து விடுவார்கள், ஒழுக்கம் இல்லாதவர்கள் திருந்திவிடுவார்கள்.
நான் உறுதியாக சொல்கின்றேன் யாராக இருந்தாலும் உங்களுடைய பிரச்சனையிலிருந்து நீங்கல் விடுபட நான் எழுதியிருக்கும் ஆய்வு கட்டுரைகள் அனைத்தும் சிறப்பாக உதவும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்னுடைய எழுத்தால் பயனடைந்தவர்கள் உங்களுடைய அனுபவத்தை அவசியம் பதிவிடுங்கள், நன்றி…