வாழ்நாள் முழுவதும் நாம் சொல்வதை செய்ய, நம் தேவையை பூர்த்தி செய்ய ஒரு அடிமை கிடைத்தால் நாம் தான் கொடுத்து வைத்தவர்கள் .பணத்தால் வாங்க முடியாத செல்வம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடிமை கிடைப்பது தான்,
ஒரு ஆணுக்கு பெண் அடிமை கிடைப்பதும், ஒரு பெண்ணுக்கு ஆண் அடிமை கிடைப்பதும் இயற்கை கொடுத்த வரம்.
அடிமை வாழ்க்கையில் உரிமைக்கு இடம் இல்லை,சொல்வதை செய்யக்கூடிய கடமை மட்டுமே உள்ளது ,எனவே இரண்டு அடிமைகளும் இல்லற வாழ்க்கையில் உரிமையை பேசாமல் அடிமையாக இருந்து கடமையை செய்தால் மட்டுமே திருமண வாழ்க்கை இனிக்கும்.
இரண்டு அடிமைகளும் தன்னை அடிமையாக பிரகடனப்படுத்திக் கொள்வது தான் திருமணம்.