12 May 2025
by
Vijayakumaran
ஆள் பாதி, ஆடை பாதி என்பது நம் நாட்டு பழமொழி. ஒரு மனிதனிடம் பழகுவதற்கு முன் ஆடை குணத்தையும், ஒழுக்கத்தையும், கொள்கையையும், செல்வத்தையும், உணர்வையும், அறிவையும் வெளிப்படுத்துகின்றது. உடையை பற்றி நான் கவலைப்படுவது இல்லை, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றியும் நான் கவலைப்படுவதில்லை என்றால் அது தவறு இல்லை ஆனால் அதற்கான எதிர் வினையை நீங்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும்.
பார்த்தவுடன் மற்றவர்களுக்கு உங்கள் மீது இருக்கும் புரிதல், நம்பிக்கை உங்கள் ஆடையை அடிப்படையாக வைத்து தான் இருக்கும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த சமுதாயம் என்ன நினைக்கும் என்ற புரிதல் இல்லாமல் அறையும், குறையுமாக ஆடை அணிந்தால் உங்கள் மீது இருக்கும் ஆபிபிராயத்தை அது மாற்றிவிடும்.
ஒவ்வொரு மனிதனின் மூளையும் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர், ஒவ்வொரு நொடியும் தனக்கு கிடைக்கும் அனுபவத்தையும், தகவலையும் மூலையில் சேகரித்து வைத்துக் கொள்கின்றது. அதன் அடிப்படையில் பணக்காரன் எப்படி இருப்பான், எளிமையானவன் எப்படி இருப்பான், பகட்டானவன் எப்படி இருப்பான், அதிகம் படித்தவன் எப்படி இருப்பான்,ஒழுக்கமானவன் எப்படி இருப்பான், ஒழுக்கம் இல்லாதவன் எப்படி இருப்பான், நேர்மையானவன் எப்படி இருப்பான் என்று ஒருவன் வாழும் கலாச்சாரத்திற்கு தகுந்தார் போல் அறிவைப் பெற்று இருப்பான், இந்த அறிவு அவனுடைய அனுமதி இல்லாமலேயே அவனை வழிநடத்தும். இந்த அறிவு ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்ப மாறுபட்டு இருக்கும்.
என்னை நம்பு நான் நல்லவன், என்னை நம்பாதே நான் கெட்டவன் என்று யார் மீதும் நம்பிதான் ஆக வேண்டும் என்று திணிக்க முடியாது. காரணம் நம்முடைய நம்பிக்கை நம் கட்டுப்பாட்டில் இல்லை நம் அனுபவத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே ஒருவர் மீது நல்ல அபிப்பிராயமும், நம்பிக்கையும் இயல்பாக தான் வரும்.
பல ஒழுக்கமான பெண்கள் ஆடையின் முக்கியத்துவம் தெரியாமல் மாடர்ன் ஆடை என்று கையில்லாமலும், காலில்லாமலும், உடலை குறைந்த அளவே மறைக்கக் கூடிய ஆடையை வெளிநாட்டில் அணிவது போல் நம் நாட்டில் அணிந்து சீரழிகின்றார்கள். இதற்கு காரணம் ஆனா, பெண்ணா என்றால், ஆணின் புரிதல் தான் காரணம். இந்த புரிதல் ஆணின் தவறு அல்ல, ஒழுக்கம் இல்லாத பெண்கள் தான் அறையும் குறையுமாக ஆடை அணிவார்கள் என்று இந்த சமுதாயம் ஆணுக்கு கொடுத்த அறிவு இது.
மேலைநாட்டு ஆண்களைவிட நம் நாட்டு ஆண்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தில் வாழ்பவர்கள் அதிகம் என்ற போதிலும் நம்நாட்டில் ஆடையால் பாலியல் குற்றங்கள் அதிகம் நடப்பதற்கு காரணம், ஆடையால் பெண்கள் வெளிப்படுத்தும் சமிக்கை வெளிநாடுகளில் ஒரு வித புரிதலையும், நம் நாட்டில் ஒரு புரிதலையும் ஏற்படுத்துவதே காரணம்.
பாலுணர்வை தூண்டக்கூடிய உடையை அணிகின்ற பெண்களில் பெரும்பாலானவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் தான் என்ற அனுபவம் நம் நாட்டில் அனைத்து மக்களிடமும் அறிவாக பதிவாகிவிட்டதால் நம் நாட்டில் உள்ள பெண்கள் ஆடையை குறைவாக அணிந்தால் அது தவறான சமிக்கையை தான் வெளிப்படுத்தும்.எனவே ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்திற்கு ஏற்ப நம்மைப் பற்றிய புரிதல் மற்றவர்களுக்கு சரியாக கிடைக்கும் வகையில் ஆடை அணிவது தான் வாழ்க்கையில் உயர்வதற்கு முதல் படி.
First Impression is the Best Impression.
in Opinion