Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    தூக்குத் தண்டனையும் சமத்துவமும்

  • All Blogs
  • Justice
  • தூக்குத் தண்டனையும் சமத்துவமும்
  • 9 August 2018 by
    Vijayakumaran
    சமத்துவத்தை வலியுறுத்தவே நான் தூக்குத் தண்டனையை எதிர்க்கின்றேன். பிறப்பும், இறப்பும், எப்படி இயற்கையின் நீதியோ அதுபோல் சமத்துவமும் இயற்கையின் நீதி. சாதியில் மட்டும் சமத்துவம் பேசுவது தவறு, சமத்துவம் பொருளாதாரம், அதிகாரம், கல்வி, இனம், மொழி, மதம், அனைத்திலும் இருக்க வேண்டும். தான் உயர்ந்தவன் என்று எவன் ஒருவனும் எதிலும் நினைக்கக் கூடாது.இதற்கு பெயர் தான் உண்மையான சமத்துவம் அதற்கான விதைத்தான் என்னுடைய ஆய்வு, இந்த ஆய்வின் முடிவை புத்தகமாக எழுதி ஊடகங்களுக்கும் பல பெரிய மனிதர்களுக்கும் அனுப்பி வைத்தேன் அவர்கள் இதுநாள்வரை மக்களிடம் கொண்டு செல்ல வில்லை. அடிமையும், அதிகாரவர்க்கமும், இயற்கையின் நீதிபடி சமம் என்பது அடிமைக்கு தெரிந்துவிட்டால் அதிகார வர்க்கத்தின் பிழைப்பு கெட்டுவிடும் என்பதால் என்னுடைய ஆய்வு மக்களிடம் போய்சேரவில்லை. என்னுடைய ஆய்வின் முடிவு ஒரு மனிதன் சுயமாக எதையும் சிந்திக்க முடியாது என்பதே ஆகும். அவன் சிந்தனைகள் அனைத்தும் இறந்தகாலத்தின் தொடர்புடன்தான் இருக்கும். இறந்த கால நிகழ்வுகளே ஒருவனின் சிந்தனைக்கு காரணம். சுயமாக ஏதொன்றையும் யாரும் சிந்திக்க முடியாது என்றால் ஓருவனுடைய செயல்கள் எப்படி அவனுக்கு கட்டுப்பட்டதாக இருக்கும். சுயமாக சிந்தித்தேன் என்பது முழுக்க முழுக்க மாயை இதை இந்த உலக மக்கள் புரிந்து கொண்டால் சமத்துவம்மலரும், சாதிக்கலவரமும், மதக்கலவரமும், முடிவுக்கு வரும். மனிதனை, மனிதன் அடிமைப்படுத்தும் நடைமுறை ஒழியும். ஏழையாக ஒருவன் வாழ்வதற்கு அவன் காரணமல்ல, பணக்காரனாக ஒருவன் வாழ்வதற்கு அவன் காரணமல்ல, என்பதை புரிந்து கொள்ளும் காலம் வரும்போது குற்றவாளியின் செயலுக்கு அவன் காரணமல்ல என்ற உண்மை புரியும். அப்போது குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற புதிய நீதி பிறக்கும். அதனால் தூக்கு தண்டனை ஓழியும்.சமத்துவம் மலரும்.
    in Justice
    எச்சரிக்கை மணி
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us