Skip to Content
Vijayakumaran
  • Home
  • Blog
  • Books
  • Behind the Writing
Vijayakumaran
      • Home
      • Blog
      • Books
      • Behind the Writing

    சனாதன தர்மம்

  • All Blogs
  • Justice
  • சனாதன தர்மம்
  • 4 June 2026 by
    Vijayakumaran
    சனாதன தர்மம் என்றால் என்ன என்பதை பற்றிய நடுநிலையான ஆய்வு கட்டுரைதான் இது, சனாதன தர்மத்தில் அரசியலும், நீதியும் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது.

    உலகில் உள்ள அனைத்து மதமும் அன்பையும், நீதியையும் தான் மக்களுக்கு போதிக்கின்றது, கல்வி அறிவு இல்லாத காலத்தில் மக்களுக்கு நீதியை கற்பித்தது மதங்கள் தான். அந்த வகையில் இந்து மதத்தின் நீதியை  தான் “சனாதன தர்மம்” என்று மதவாதிகள் சொல்கின்றார்கள்.

    ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்துவதற்கு முன்பு அரசர்கள் சமாதான தர்மத்தின் படி தான் நாட்டையும், மக்களையும் வழி நடத்தினார்கள். அரசர்கள் சனாதன தர்மத்தின் அடிப்படையில் தான் நீதியையும்  வழங்கினார்கள், எந்த அரசரிடமும் சட்ட புத்தகங்கள் இல்லை, எழுதப்படாத நீதிதான் சனாதன தர்மம். ஒட்டுமொத்த சமுதாயமும் சனாதன தர்மம் என்ற நீதியை கடைப்பிடித்து தான் வாழ்ந்தார்கள், சனாதன தர்மம் இந்த காலத்தில் தான் உருவானது என்று யாராலும் சொல்ல முடியாது, மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு இணையாக சனாதன தர்மமும் பல்லாயிரம் ஆண்டுகளாக மாற்றங்கள் அடைந்து வளர்ந்து வந்த நீதிதான் சனாதன தர்மம்.சனாதன தர்மத்தை இந்து மதத்தின் தர்மம் என்று சொல்வதைவிட இந்த நிலப் பகுதியின் தர்மம், நீதி என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

    ஜனநாயக ஆட்சி முறைக்கு முன்பு வரை உலகம் முழுவதும் மன்னர் ஆட்சி முறை தான் இருந்தது.மக்களின் புரட்சியால் மன்னர்களின் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி முறை உலகம் முழுவதும் பரவியது, மக்களாட்சியில் மக்களின் பிரதிநிதிகளால் ஒவ்வொரு நாட்டுக்கும் சட்டங்கள் உருவாக்கப்பட்டு சட்டப் புத்தகங்கள் தான் அனைத்து நாட்டுக்கும் நீதியாக தற்போது இருக்கின்றது.

    மன்னர் ஆட்சி காலத்தில் பிறப்பால் தான் மன்னராக முடியும் என்ற நீதி இருந்ததால் அரசர் முதல் அடிமட்ட தொழிலாளி வரை அனைவரும் பிறப்பின் அடிப்படையில் தான் அவரவர் பெற்றோர்கள் செய்த தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்பது நீதியாக இருந்தது. இந்த நீதி சரியா? தவறா? என்று ஆய்வு செய்ய வாழ்வியலை பற்றிய அறிவு உள்ள ஆறறிவு மனிதர்களால் தான் முடியும்.

    இயற்கை மனிதர்களை எப்படி இயக்குகின்றதோ அதுதான் இயற்கையின் நீதி ,இந்த இயற்கையின் நீதி என்ன என்பதை தெரிந்து கொண்டு இயற்கையின் நீதியோடு மனிதன் நீதி ஒத்து இருந்தால்தான் அது சரியான நீதியாக இருக்க முடியும். அந்த வகையில் ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் ஆரோக்கியத்தையும், நோயையும், உணர்வையும், உணர்வின் மூலம் அறிவையும், உடல் அழகையும், உடல் அமைப்பையும் பெறுகின்றான். மேலும் மனிதனுடைய சிந்தனையும், செயலும் கடந்த கால நிகழ்வுகளின் தொடர் வினையின் தொடர்ச்சியால் மட்டுமே நடப்பதால் ஒரு மனிதனுக்கு பிறப்பால் தான் அனைத்தும் கிடைக்கின்றது என்பது இயற்கையின் நீதியாக உள்ளது. எனவே பிறப்பால் அவரவர் தொழிலை அவரவர் செய்வது என்பது மன்னர் ஆட்சி காலத்தில் சரியான நீதிதான்.
    ஆனால் இயற்கையின் நீதிபடி பிறப்பால் யாரும் உயர்ந்தவரும் அல்ல, தாழ்ந்த வரும் அல்ல,அனைவரும் சமம் தான் என்பதற்கு ஆதாரம், யாருடைய செயலும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை, விதியின் படி தான் நாம் இயக்கபடுகிறோம் என்பதுதான்.

    மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஆன்மீக கட்டுக்கதை தான் உயர்ந்த சாதியினர் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவர்கள் என்றும்,தாழ்ந்த சாதியினர் கடவுளின் பாதத்தில் இருந்து பிறந்தவர்கள் என்றும் மனிதர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தி இயற்கையின் நீதிக்கு எதிராக  உயர் சாதியினர் செயல்பட்டு இருக்கின்றார்கள் என்பது சனாதன தர்மத்தின் மூலம் தெளிவாகத் தெரிகின்றது. எனவே மன்னர் காலத்தில் மனிதர்களுக்கு இடையில் சனாதான தர்மத்தால் இருந்த ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய அநீதி.“அனைவரும் சமம்” என்ற நீதி மக்களாட்சியால் மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய நீதி.

    மக்களாட்சியில்  சனாதன தர்மம் என்ற நீதியில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
    1)பிறப்பால் மன்னராகும் முறை ஒழிப்பு,
    2) பிறப்பால் பெற்றோர் தொழிலை தான் பிள்ளைகள் செய்ய வேண்டும் என்ற முறை ஒழிப்பு,
    3) அனைத்து மனிதர்களும் சமம் என்ற சமத்துவம், 
    4)ஆன்மீகம் தனிமனித நம்பிக்கை எனவே ஆன்மீக நீதி கதைகளுக்கு தேசத்தின் நீதி கட்டுப்படாது என்பது போன்ற மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் சனாதனம் தர்மம் என்ற நீதி தற்போது நம் நாட்டில் ஒழிந்து விட்டதா என்றால் இல்லை, சனாதன தர்மம் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. நம்முடைய இந்திய அரசியலமைப்பு சட்டம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் தான் இருக்கின்றது.அதற்கு சான்று பிறப்பால் தான் ஒருவர் அவருடைய முன்னோர்களின் சொத்தை, செல்வத்தை அடைகின்றார். பிறப்பால் தான்  உறவுமுறை உரிமையை பெறுகின்றார்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் ஆட்சியில், கட்சி தலைவரின் வாரிசுகள் தான் அடுத்த தலைவராக வருகின்றார்கள் என்பதும் சனாதன தர்மம் தான், சனாதன தர்மத்தை எதிர்க்கும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி சனாதனப்படி தான் திமுகவின் அடுத்த தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.ஜனநாயக நீதியின் படி மக்களை ஆட்சி செய்யும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு மட்டுமே உண்டு என்றாலும் சனாதன தர்மபடி பெற்றோரின் உழைப்பால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள பேருக்கும், புகழுக்கும், செல்வத்துக்கும் வாரிசுகளே உரிமையாளராக ஆகின்றார்கள்.அதன்படி உதயநிதி திமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பது  சனாதன தர்மம்.ஆனால் ஜனநாயகப்படி நாட்டை ஆளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவருக்கு தான் உண்டு,அதை பிறப்பால் பெற முடியாது.

    சனாதன தர்மம் என்பது இந்துமத தர்மம் அல்ல, இந்துமதம் உருவாவதற்கு முன்பே நம் மண்ணில் உருவான நீதி பல மாற்றங்களுக்குப் பிறகு இந்திய அரசியல் அமைப்பு சட்டமாக இன்று உள்ளது.ஆங்கிலேயர் வருகைக்குப் பிறகுதான் இந்து மதம் என்ற பெயர் வைக்கப்படுகின்றது, எனவே சனாதன தர்மம் என்பது மதத்தின் நீதி அல்ல,இந்த மண்ணின் நீதி தான்  சனாதன தர்மம்.

    மக்களாட்சிக்கு தகுந்தார் போல் சனாதன தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு சனாதன தர்மத்தில் சில மாற்றங்களை  ஏற்படுத்தி பல சட்ட மேதைகளின் ஆலோசனைப்படி இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது,இந்திய அரசியலமைப்பு சட்டப்படி உலகிலேயே சிறந்த ஜனநாயக நாடாக நம் நாடு திகழும் இந்த சூழலில் அரசியல் லாபத்திற்காக பல நூறு ஆண்டுகள் பின்னோக்கி சென்று நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் பிரதமரும், கவர்னர்களும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இருக்க சனாதன தர்மத்தை உயர்த்தி பேசுவதும்,  எதிர்க்கட்சிகள் அதை எதிர்ப்பதும் அரசியலுக்காக மக்களை ஏமாற்றும் செயலாகவே எனக்கு தெரிகின்றது.

    இயற்கையின் நீதியை சார்ந்து மனிதர்களின் நீதியும் இருந்தால் தான் அது சரியான நீதி, இயற்க்கை நீதியை தெரிந்து கொள்ள நான் எழுதிய “குமார் விதிகள்” என்ற புத்தகத்தை படித்து பயன்பெறுங்கள். https://www.vijayakumaran.in/kumar-vidhigal

    in Justice
    # அரசியல் ஆன்மீகம் இந்துமதம் இலக்கியம் கலாச்சாரம் சனாதனதர்மம் தத்துவம் நீதி வரலாறு
    உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு…
    Useful Links
    • Home
    • Behind the writing
    • Books
    • Blog
    • Legal
    • Privacy Policy
    Connect with us
    • Contact us
    • rvijayakumar.neyveli@gmail.com
    Follow us