தன்னுடைய செயலுக்கு தான்தான் காரணம் என்று சமுதாயம் நம்பிய காலம் வரை, குற்றவாளியின் செயலுக்கு அவர்தான் காரணம் என்று எண்ணி தண்டனை கொடுத்தது சரியே! ஆனால் இன்று சுயமாக எதை ஒன்றையும் ஒருவரால் சிந்திக்க முடியவில்லை இறந்த காலத்தின் நிகழ்வுகள்தான் ஒருவனுடைய இன்றைய செயலை தீர்மானிக்கின்றன என்பதை சமுதாயம் அறிவியல் பூர்வமாக உணர்ந்த பின் குற்றவாளியின் செயலுக்கு தண்டனை கொடுப்பது சரியா? சமுதாயத்தில் அறிவு வளர வளர நீதியும் மாற வேண்டும்!