தர்மம் என்றால் ஒருவர் விரும்பி கொடுக்கவேண்டும், உரிமை என்றால் போராடித்தான் பெற வேண்டும்.
சமத்துவம் தனிமனித உரிமை, இயற்கையின் நீதி என்பதை ஒரு சமுதாயம் எப்போது உணர்கின்றதோ அப்போதுதான் சாதி சமத்துவம் என்ற அரசியலைக் கடந்து அனைத்திலும், அனைவருக்கும் சமத்துவம் என்ற உரிமையை போராடிப் பெறமுடியும்.
பெஞ்சமின் மின்சாரத்தை கண்டுபிடித்ததால் மின்சாரம் அவருக்கு சொந்தமல்ல, யார் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றார்களோ அவர்களுக்கு தான் அது பலன் தரும், அதுபோல் விதி அறிவியல் உண்மை, எது நடக்குமோ அது நடந்தே தீரும், மதியால் விதியை வெல்ல முடியாது என்பதை நான் கண்டு அறிந்ததால் விதி எனக்கு சொந்தமல்ல. விதியைப் புரிந்து கொள்ளும் அனைவருக்கும் அது பயன் தரும்.
விதியை நம்பினால் அது மூடநம்பிக்கை !
விதியைப் புரிந்து கொண்டால் அது அறிவியல் !
எல்லாம் விதியின் செயல் என்பதை புரிந்துகொண்டால் கடவுளின் செயல் என்று எதுவும் இல்லை என்பதை புரிந்துகொள்வீர்கள்.
கடவுள் செயல்படாததால் கடவுள் இல்லை என்பதை புரிந்துகொள்வீர்கள்.
எல்லாம் விதியின் செயல் என்பதால் ஒருவன் உயர்ந்தவனாக இருப்பதற்க்கும், தாழ்ந்தவனாக இருப்பதற்க்கும், அவன் காரணமல்ல என்பதை புரிந்து கொள்வீர்கள்.
விதியை அனைவரும் புரிந்து கொண்டால் உயர் பதவியில் இருப்பவரும் பரதேசியும் சமமாக தான் இந்த சமுதாயத்திற்கு தெரியும். இந்த நிலை உருவாக வேண்டுமென்றால் பழைய பகுத்தறிவு கொள்கையாலும், ஆன்மீக பற்றாலும், கண்களை மூடிக் கொள்ளாமல் விதி அறிவியல் உண்மை என்பதை சாதியாலும், மதத்தாலும், பொருளாதாரத்திலும், கல்வியிலும் ஒடுக்கப்பட்ட, தவறான நீதியால் தண்டிக்கப்பட்ட மக்கள் படித்துப் புரிந்து கொண்டால் உலகம் முழுவதும் புதிய நீதி உருவாகும். அப்போது சமத்துவத்தை அனைத்துத் துறையிலும், அனைவரும் அனுபவிப்பார்கள்.
புதிய நீதி உருவாக நான் எழுதிய புத்தகத்தை படியுங்கள், நான் எழுதிய புத்தகத்தை நீங்கள் படித்தால் எனக்கு எந்த பயனும் இல்லை, ஆனால் படிக்கின்ற உங்களுக்கு தான் அது நன்மையை கொடுக்கும் என்பதை புரிந்து படியுங்கள்.