பேரறிவாளனின் தூக்குத்தண்டனையை தடை செய்ய வேண்டும் என்று நான் எழுதியபோது தமிழ் உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன்,
சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனையை நான் எதிர்த்த போது சாதி உணர்வாளனாக வாசகர்களுக்கு தெரிந்தேன்,
இன்று ஹாசினியின் கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை கொடுத்ததை அறிவற்ற செயல் என்று எதிர்க்கின்றேன்.
இதையும் புரிந்து கொள்ளாமல் என்னை முட்டாள் என்று என்னும் வாசகர்களே நான் பெற்ற புதிய அறிவை நீங்களும் பெற முயற்சி செய்யுங்கள்.
''உன் செயலுக்கு நீ காரணம் அல்ல'' என்ற என்ஆய்வை எப்போது இந்த உலகம் புரிந்து கொள்கின்றதோ அப்போதுதான் புதிய நீதி பிறக்கும்.
அனைவரும் சமம் என்ற மனிதாபிமானம் ஒவ்வொருவர் மனதிலும் மலரும்,அன்று தூக்குத் தண்டனை என்ற கொடுமை உலகில் ஒழியும்.
மிருகமாக உள்ள மனிதனை, மாமனிதனாக மாற்றுவதற்கு என்னுடைய ஆய்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது ஊடகத்தின் கடமை.
தூக்குத் தண்டனையை எதிர்க்கும் மனித உரிமை ஆர்வலர்கள் ஏன் தஷ்வந்தின் தூக்குத்தண்டனையை எதிர்க்கவில்லை ?,எதிர்தால் மக்களிடம் அவர்களின் செல்வாக்கு குறைந்து விடும் என்ற அச்சமே காரணம்.
நான் தொடர்ந்து தூக்குத்தண்டனையை அஞ்சாமல் எதிர்ப்பதற்கு காரணம் தூக்குத்தண்டனை அறிவற்ற செயல் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆதாரம் என்னிடம் உள்ளது.
மாவட்ட நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை யார் தூக்குத் தண்டனை கொடுத்தாலும் ஆது அறிவற்ற செயல் தான்.
என்னுடைய இந்தக் கட்டுரையை தூக்குத் தண்டனை கொடுத்த யாராவது ஒரு நீதிபதி படிக்கும்வரை பகிருங்கள்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்மீது போட்டால் அவர்கள் நீதிமன்றத்திலேயே நான்
அறிவியல் பூர்வமாக நிரூபிப்பேன் அவர்களின் தீர்ப்பு அறிவற்ற செயல் என்று.