ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா?
15 September 2022by
Vijayakumaran
பெரியார் சிலையில் எழுதப்பட்டிருக்கும் கடவுள் இல்லை என்ற வாசகத்தை எடுக்கச்சொல்லி தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் என்ற செய்தியைக் கேட்டு வியந்து விட்டேன், காரணம் ஒரு நம்பிக்கையால் மற்றொரு நம்பிக்கையை பொய் என்று சொல்ல முடியுமா என்பதுதான்.
கடவுள் இருக்கு என்பது நம்பிக்கை என்பது போல், கடவுள் இல்லை என்பதும் ஒரு நம்பிக்கைதான். ஒருவரின் நம்பிக்கையை பொய் என்று சொல்ல இருவரிடமும் அதற்கான அறிவியல் ஆதாரம் இல்லை.
என்னுடைய கேள்வி கடவுளைப் பற்றிய அறிவு இல்லாத இருவர் போடும் சண்டையை கடவுளைப் பற்றிய அறிவு இல்லாத மூன்றாவது நபரால் (நீதித்துறை) எப்படி தீர்க்கமுடியும்.
எனவே யார் சொல்வது சரி என்பதை ஆராயாமல் உரிமை சார்ந்த பிரச்சனையாக மட்டுமே நீதிமன்றம் இதை பார்க்கும்.
விதி உண்மை என்ற என்னுடைய அறிவியல் ஆய்வை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் மட்டுமே கடவுள் இல்லை என்பதை அறிவியலால் நிரூபிக்க முடியும். அந்தநாள் வரை கடவுள் இல்லை என்பதும், கடவுள் இருக்கு என்பதும் அவரவர் உரிமையாக தான் நீதிமன்றம் பார்க்கும்.
கடவுள் இருக்கா?இல்லையா ?என்பது அறிவு சார்ந்த விடயமா, அல்லது உரிமை சார்ந்த விடயமாக, என்பது வழக்கை விசாரிக்கும் நீதியரசரின் அறிவு சார்ந்த விடயம்.