கர்மாவை உண்மை என்று நம்புவது அறியாமை ! கர்மாவை அறிவியலால் புரிந்து கொண்டால் அறிவு ! முன்னோர்கள் கர்மாவை புரிந்து கொள்ள முடியாததால் தான் நம்பினார்கள், கர்மா என்ற சொல்லுக்கு அறிவியலில் தொடர்வினை என்று பொருள். எந்த ஒரு செயலுக்கும் எதிர்வினை உண்டு என்பது அறிவியல். கர்மா என்பது முன்ஜென்மத்தில் செய்த செயலின் பலன் அல்ல. கர்மா என்பது முன்னோர்கள் செய்த செயலின் பலன் என்று பொருள். முன் ஜென்மம், மறுபிறவி என்று எதுவும் இல்லை. மனிதனை வழி நடத்த உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைக் கதை. நேற்றைய நிகழ்வுகள் தான் இன்றைய நிகழ்வுக்குக் காரணம் ! இன்றைய நிகழ்வுகள் தான் நாளைய நிகழ்வுக்குக் காரணம் ! நாம் ஒரு கல்லைப்போல் தான் தொடர்வினை இயக்கினால் தான் நாம் இயங்க முடியும் எனவே கர்மா என்பதும் விதி என்பதும் அறிவியல் உண்மை. இன்று நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலும் நூறு சதவிகிதம் நம் சந்ததிகளை பாதிக்கும். இன்றைய அறிவார்ந்த சமுதாயத்தில் கர்மா என்று சொல்லாமல் தொடர்வினை என்று அறிவியல் பெயரை சொன்னால் சரியாக இருக்கும். நீதிமன்றமும் குற்றவாளி தண்டனைக்கு உரியவர் என்று மட்டும் பார்க்காமல் தொடர் வினையால் (கர்மா )பாதிக்கப்பட்டவர் என்று அறிவியல்பூர்வமாக அணுகினால் புதிய நீதி உருவாகும்.