கடந்த இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் இரண்டு என்கவுண்டர் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது. காவல்துறை தற்காப்பிற்காக இந்த கொலையை செய்யவில்லை என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியாத அரசும்,காவல்துறையும் தன் மீது உள்ள அவப்பெயரை மறைக்க, மக்களை ஏமாற்ற என்கவுண்டர் என்ற பெயரில் கொலையை காவல்துறை செய்து இருக்கின்றது.
அரசால் காவல்துறையை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு காவல் துறையில் லஞ்சம் பெருகிவிட்டது. காவல்துறையின் கொலைகள் அரசின் கையாலாகாத தனத்தின் வெளிப்பாடு. சட்டத்தை பாதுகாக்க கூடிய அரசே நீதித்துறையின் அதிகாரத்தை தன் கையில் எடுத்திருப்பது அச்சமாக இருக்கின்றது.
தனக்கு எது சரியோ அதன்படி கொலை செய்த ரவுடியும்,தனக்கு எது சரியோ அதன்படி கொலை செய்த காவல்துறையும் ஒன்றுதான். ஒரு ரவுடியை போல் அரசு செயல்படுவது மிகவும் ஆபத்தானது.
காவல்துறை லஞ்சத்தில் மூழ்கி கிடக்கின்றது,காவல்துறையில் ஒழுக்கத்தை ஏற்படுத்தாமல் நீதியை தன் கையில் எடுத்துக்கொண்டு குற்றவாளியை கொள்வதால் எந்த பயனும் இல்லை. மக்களை ஏமாற்ற முடியாது இது போன்ற செயல்களால் காவல்துறைக்கும்,அரசுக்கும் அவப்பெயர் தான்.
நீதித் துறை வேடிக்கை பார்க்காமல் அரசு மீதும்,காவல்துறை மீதும் கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சட்டத்தின் பாதுகாப்பில் மக்கள் வாழ முடியும்.