22 July 2018
by
Vijayakumaran
திரைப்படம் பார்க்கும் பழக்கம் இல்லாத நண்பர்களுடன் நான் உணவகத்தில் சாப்பிடும்போது சாப்பிட்டது போதாது என்பதை நகைச்சுவையோடு சொல்ல நினைத்து கோட்டை எல்லாம் அழிங்க முதலிலிருந்து என்று சொல்லிவிட்டு நான் மட்டும் சிரித்துக் கொண்டு இருந்தால் எப்படி இருக்குமோ அது போல் தான் நான் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக எழுதிக்கொண்டு இருப்பதும்.
இந்த சமுதாயத்தால் என்னுடைய எழுத்தை புரிந்துகொள்ளவும் முடியவில்லை, என்னால் புரிய வைக்கவும் முடியவில்லை, இருப்பினும் சென்னையில் 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை பற்றி என்னுடைய கருத்தை எழுதாமல் இருக்க முடியவில்லை. எனவே மீண்டும் இந்தக் கட்டுரை மூலம் புரியவைக்க முயற்சி செய்திருக்கின்றேன்.
ஹாசினியின் கொலையை போல் நம் நாட்டில் பல ஒழுக்கக்கேடான சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடந்து இருந்தாலும் அவற்றை தனிமனிதனின் ஒழுக்கமின்மை, தனிமனிதனின் மனநிலைக் கோளாறு, என்று எண்ணி இந்த சமுதாயமும், நீதித் துறையும், அரசும், உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் தவறு செய்தவனை தண்டித்தால் இனி இந்த சமுதாயத்தில் இதுபோன்ற தவறு நடக்காது என்று எண்ணி கடந்து சென்றது போல் இந்த சம்பவத்திலும் எளிதில் நாம் கடந்து சென்றுவிட முடியாது.
11 வயது சிறுமியை 20க்கும் மேற்பட்டவர்கள் பாலியல் கொடுமை செய்து இருக்கின்றார்கள் என்றால் இந்த சமுதாயமே ஒழுக்கக்கேடான சமுதாயம் என்பது உறுதியாகின்றது. இந்த சமுதாயத்தில் 50 சதவிகிதம் பேர் இவர்களை போன்றவர்கள் தான்.வாய்ப்பு கிடைத்தால் நம்மில் பலர் குற்றவாளிகள்தான்.
இந்த சம்பவம் நமக்கு ஒரு எச்சரிக்கை மணி!!
திரைத்துறையினரும், அரசியல்வாதிகளும், எழுத்தாளர்களும், இந்த சமூதாயத்தின் ஒழுக்கத்தைப் கடந்த 60 ஆண்டுகளாக சீரழித்து விட்டு, இன்று குற்றவாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று சொல்வது வியப்பாக உள்ளது. சொன்னவர்களையும் சேர்த்து பாதி பேரை தூக்கில் போட்டால் தான் இந்த சமுதாயம் ஒழுக்கமான சமுதாயமாக மாறும்.
(1) நாம் எதைப் பார்க்கிறோமோ அதை கேட்கின்றோமோ அது நம்மை நம் அனுமதி இல்லாமலேயே ஆளஆரம்பித்துவிடும்.
(2) நாம் சுயமாக சிந்திக்கவோ,அல்லது செயல்படவோ, முடியாது நம்முடைய இறந்த காலம் தான் நம்மை இயக்குகின்றது.
(3) நாம் ஒரு கல்லைப் போல் தான் வெளிசக்தி இயக்கினால் தான் நாம் இயங்க முடியும். இந்த மூன்றும் உலகில் இதுவரை யாரும் சொல்லாத அறிவியல்.
இது தொடர்பான அறிவியல் உண்மையை இதுவரை உலகில் யாரும் பேசாததால் நான் சொல்கின்ற இந்த தகவல் பலருக்கும் புரியாது, இருப்பினும் சமுதாய நலன் கருதி நான் சொல்வதை நம்புங்கள். நம்பவில்லை என்றால் நான் சொன்னதை தவறு என்று நிரூபித்தால் ஒரு கோடி பரிசாக தருகின்றேன்.
என்னுடைய ஆய்வின்படி 11 வயது சிறுமிக்கு ஏற்பட்ட இந்த கொடுமைக்கு 60 ஆண்டுகளாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை இந்த சமுதாயத்தில் இருந்து திரைத்துறையினரும், அரசியல் தலைவர்களும், எழுத்தாளர்களும், கொஞ்சம், கொஞ்சமாக முழுவதையும் சீரழித்தது தான் காரணம்.
தந்தை பெரியார் அவர்கள் இந்த சமுதாய முன்னேற்றத்திற்கு பல நல்ல செயல்களை பொதுவாழ்வில் செய்திருந்தாலும் சுய வாழ்வில் முதுமையில் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டது சமுதாயத்தின் ஒழுக்கக்கேடாக பார்க்கப்பட்டது.அதைத் தொடர்ந்து மக்களை வழி நடத்துகின்ற பல அரசியல் தலைவர்களின் சுய வாழ்க்கை சமுதாய ஒழுக்கத்தை சீரழிப்பதாகவே இருந்தது.
கூத்தில் ஆண் தான் பெண் வேடமிட்டு நடிப்பார்கள். திரைப்படம் வந்தபோது ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் கணவன் மனைவியாக நடிப்பதை முதலில் மக்கள் அருவருப்பாகவே பார்த்தார்கள். நாட்கள் செல்ல, செல்ல, எம்ஜிஆர் போன்ற நடிகர்கள் பல பெண்களை கட்டிப்பிடித்து நடிப்பதை மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். சமுதாயத்தில் ஒழுக்கம் சீரழிய ஆரம்பித்தது அப்போதுதான்.
அதைத் தொடர்ந்து பாரதிராஜா அவர்கள் பள்ளி செல்லும் மாணவர்கள் காதலிப்பதாக திரைப்படம் எடுத்து ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்தையும் சீரழித்தார். அது போல் பாலசந்தரும் விபச்சாரியின் செயலை நியாயப்படுத்தி படமெடுத்து அவர் பங்குக்கு அவரும் இந்த சமுதாயத்தை கெடுத்தார். அதுபோல் பெரும்பாலான திரைப்படங்களும், நாடகங்களும், ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுக்கத்தை சிதைத்துவிட்டன. அதைத் தொடர்ந்து கமல்ஹாசன் கௌதமி போன்ற பிரபலங்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவியாக வாழ்வதும் பிறகு தொலைக்காட்சியில் பிரிந்து விட்டோம் என்று வெட்கமில்லாமல் சொல்வதும்,இவர்களைப் போன்ற ஒழுக்கம் இல்லாதவர்கள் மக்களை ஆள நினைப்பதும், சமுதாய ஒழுக்கக் கேட்டிற்கு மிகப்பெரிய காரணம்.
ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்களும் முற்போக்கு சிந்தனை என்று எண்ணிக்கொண்டு ஒழுக்க நெறிகளை தான் எழுதிய கதைகளில் சிதைத்ததும் இதற்குக் காரணம்.
நம் முன்னோர்களின் ஒழுக்கமில்லாத செயல் நம்மை சீரழித்துவிட்டது, அதுபோல் நம்முடைய செயல் நம் சந்ததிகளை சீரழித்து விடக் கூடாது. எனவே நம் பிள்ளைகளுக்கு நல்லதொரு இறந்தகாலத்தை ஏற்படுத்துவோம். அப்போதுதான் வருங்காலம் அவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும்.
இப்போது சிந்தியுங்கள் !!பதினொரு வயது சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமைக்கு யார் காரணம் ?யார் குற்றவாளி ?என்று காரணம் நாம் தான் !குற்றவாளி அந்த 20 பேரும் தான்.
கற்கால மனிதனைப் போல் சிந்திக்காமல் குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதால் மட்டும் சமுதாயம் மாறாது, 'புதிய நீதியை உருவாக்குவோம்'
(1) குற்றவாளி தண்டனைக்கு உரியவன் அல்ல, இந்த சமுதாயத்தால் பாதிக்கப்பட்டவன். எனவே அவன் இந்த சமுதாயத்தை கெடுக்காமல், திருந்தும் வரை சிறையில் அடைக்கலாம்.
(2) குற்றத்திற்கு காரணமான அவர்கள் தொடர்ந்து இந்த சமுதாயத்தை கெடுக்காமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். மக்களும் ஆதரவு கொடுக்க வேண்டும்.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் சமுதாயத்தின் ஒழுக்கத்தை காக்கும் வகையில் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் திருமணத்திற்கு முன் காதலிப்பதை குற்றமாக அரசு அறிவிக்க வேண்டும்.
திரைப்படம், குறும்படம், நாடகம், புத்தகத்திலும் கணவன், மனைவி உறவை சிதைக்கக்கூடிய கதைகளை தடை செய்ய வேண்டும்.
நம் விருப்பம் இல்லாமலேயே நாம் பார்க்கும் வகையில் உள்ள சுவரொட்டிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், நாடகங்கள், அனைத்திலும் சிறிதளவுகூட ஆபாசம் இருக்கக் கூடாது.
ஆணும், பெண்ணும், தொட்டு ஆடும் நடனத்தை தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் தடை செய்ய வேண்டும்.
இவைகளை நீதிமன்றமும், அரசும், செய்யாமல் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை கொடுத்தாலும் அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை.
பக்கத்து வீட்டில் ஒழுக்கமானவன் இருந்தால்தான் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். என்னுடைய சுயநலம் உங்களை ஒழுக்கமானவராக மாற்றுவதே, நீங்களும் சுயநலவாதியாக இருந்தால் பகிருங்கள் நீதித்துறைக்கும், அரசுக்கும், இந்த புதிய நீதி தெரியும் வரை.
in Justice