அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழக அரசாணை சமத்துவத்தின் அடையாளம். ஆனால் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நிமித்தோம் என்று திமுக அரசு சொல்வது அவர்களுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிரானது.
பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னது அவருடைய கருத்து, ஆதாரம் இல்லாத ஒருவருடைய கருத்தை வேறு ஒருவர் கருத்தால் நிராகரிக்கலாம், கடவுள் இல்லை என்பதற்கும், இருக்கு என்பதற்கும் ஆதாரம் இதுவரை யாரும் கொடுக்கவில்லை, எனவே இரண்டு கருத்தும் நம்பிக்கையை சார்ந்தே உள்ளது.
திமுக வின் கடவுள் மறுப்புக் கொள்கை உச்சநீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாததால் உச்சநீதிமன்றம் ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்கள் நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்துள்ளது. அதனால்தான் ஆகம விதிப்படி தான் அவர்களை நியமித்து உள்ளோம் என்று திமுக அரசும் சொல்கின்றது. ஆனால் பிராமணர்கள் ஆகம விதிப்படி இல்லை என்று எதிர்க்கின்றார்கள்.
கடவுள் இல்லை என்பதை ஆதாரத்தால் நிரூபித்து விட்டால் இல்லாத கடவுளுக்கு ஆகம விதிப்படிதான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பே தவறாகிவிடும்.
ஆதாரம் அடிப்படையில் தான் நீதி இருக்க வேண்டும் என்பது நீதி, எனவே நீதிமன்றத்தில் என்னுடைய ஆய்வில் உள்ள கடவுள் இல்லை என்ற அறிவியல் ஆதாரத்தை திமுக அரசு மேற்கோள் காட்டி தன்னுடைய கொள்கையை நிலை நிறுத்திக் கொள்வது திமுகவின் கடமை.
கடவுள் இல்லை என்பதை நீதிமன்றத்தில் திமுக ஆதாரத்தோடு நிரூபித்து விட்டால் தமிழர்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறி விடும்.